பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
ஆடி மாதத்தில் விவசாயிகள் தங்களது வயல் மற்றும் தோட்டங்களில் செடி, கொடி பயிர்களை நடவது செய்வது வழக்கம். நாகரிக வளர்ச்சியில் கிராமத்தில் இருந்து தற்போது நகர்ப் புறங்களில் பலர் குடியேறி இருப்பதால், அவரவர் வீட்டு குடியிருப்பு பகுதியில் மாடித் தோட்டத்தில் தங்களுடைய மூன்று மாத பயிர்களை நடவு செய்து பயிரிட்டு தங்களது உபயோகத்திற்கு காய்கறிகளை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இது கொரோனா காலத்தில் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்தது. அதைத் தொடர்ந்து இந்த மாடித் தோட்ட விவசாயம் மிகப்பெரிய பயனை தந்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி அரசு எட்டு விதைகள் கொண்ட பெட்டிகளை இலவசமாக ஆடிப்பட்டத்தில் மாடித்தோட்ட விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது.
/indian-express-tamil/media/post_attachments/598c9f59757879599717452647818c0785e935f7a60155160ec737c1c6778056.jpg)
இந்தாண்டு ஆடிப்பருவம் தொடங்கி ஒரு சில நாட்களே ஆககும் நிலையில், புதுச்சேரி வேளாண் துறை ரூபாய் 200 மதிப்புள்ள இலவச விதைகளை கொடுக்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. இந்தக் கிட்டில் எட்டு வகையான விதைகள் பாக்கெட் உள்ளன. கத்தரி, வெண்டை, மிளகாய், பூசணி, கீரை, வகைகள், பாலக் கீரை, மற்றும் பீன்ஸ் ஆகிய விதைகள் கொண்ட பெட்டியை ஒவ்வொரு விவசாயிகளுக்கும் புதுவை அரசு இலவசமாக தருகிறது.
ஆனால், புதுவை அரசு இதை விலை கொடுத்து பெங்களூர் வேளாண்மை அறிவியல் நிலையத்திலிருந்து வாங்கி, அந்தத் தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. கே.வி.கே.ஐ.சி.ஏ.ஆர் என்கிற நிறுவனத்தில் இருந்து இந்த விதைகளை வாங்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது துவை அரசு
இந்த விதைகளை வாங்கு விரும்பும் மக்கள் தங்கள் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு காண்பித்து இலவச விதை பெட்டியை பெற்றுக் கொள்ளலாம். புதுச்சேரி மற்றும் அதன் சுற்று கிராமப்புறங்களான காலாப்பட்டு, தட்டாஞ்சாவடி, தவளக்குப்பம், கன்னி கோயில், பாகூர், சேலிய மேடு, கோயம்புத்தூர், கரியமாணிக்கம், வில்லியனூர், திரு காஞ்சி, ஒதியம் பட்டு, அரியூர் உள்ளிட்ட 20 வேளாண் அலுவலங்களில் விதைகள் வழங்கப்படுகிறது.
"இந்த உழவர் உதவியகத்தில் ஏ.ஓ.ஏ.ஏ.ஓ அலுவலர்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்களிடம் சென்று இந்த இலவச விதை பெட்டியை பெற்றுக் கொள்ளலாம்" என்று இயக்குனர் தெரிவித்தார். மேலும் அவர் அந்த கிட்டில் உள்ள விதைகளை திறந்து நம்மிடம் காண்பித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“