மாணவர்களின் அரியர்ஸ்...தமிழகம் போல புதுச்சேரியிலும் வேண்டும் - எம்.எல்.ஏ வைத்தியநாதன்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ய நேர விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு.மு. வைத்தியநாதன் மாணவர்களின் அரியர் பற்றி பேசியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ய நேர விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு.மு. வைத்தியநாதன் மாணவர்களின் அரியர் பற்றி பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Puducherry assembly

புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ய நேர விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு.மு. வைத்தியநாதன் அவர்கள் பேசியது பற்றி பார்ப்போம்.
Advertisment
தொழில்நுட்ப கல்வி, பலவகை தொழில்நுட்பக்கல்வி, பட்டயப்படிப்பு ஆகியவற்றில் தேர்வு எழுதுவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை முடித்து அந்த வாய்ப்புகளில் தேர்ச்சி பெறாமல் நிலுவை பாடங்கள் (ARREARS) வைத்துள்ளவர்களுக்கு தமிழகத்தில் ஒரு அரசாணை வெளியிட்டு வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவ தேர்வுகளின் பொழுது தேர்வு எழுத சிறப்பு அனுமதி (GRACE CHANCE) வழங்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இதே போல நமது புதுச்சேரியிலும் வழங்க வேண்டுமென முதல்வர் அவர்களையும் உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்று சட்டமன்ற உறுப்பினர் மு.வைத்தியநாதன் கூறியுள்ளார்.
பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக்கல்வி முடித்த நிறைய மாணவர்கள் நிலுவை பாடங்கள் அதாவது ARREARS வைத்துள்ளனர். அவர்களுக்காக வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு இதுபோல சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்களும் அவர்களின் குடும்பத்தின் பட்டப்படிப்பு கனவும் நிறைவேறும்.
தமிழகத்தில் வெளியிட்டுள்ள அரசாணையை அடிப்படையாக கொண்டு புதுச்சேரி மாநிலத்திலும் இது போன்ற ஒரு முறை வாய்ப்பு (GRACE CHANCE) வழங்க வேண்டுமென மாணவர்களின் நலன் கருதி  கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
Pudhucherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: