புதுவை பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழிலியல் கூட்டுறவு சங்கம், நவராத்திரிக்கு தேவையான பொம்மைகளை உற்பத்தி விலைக்கு விற்பனை செய்ய வந்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ’புதுவை பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழிலியல் கூட்டுறவு சங்கம், பாரம்பரிய பொம்மை உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு 1983-ஆம் ஆண்டு முதல் உறுப்பினர்களுக்கும் பொம்மை தொழில் உற்பத்திக்கும் நல்ல சேவை செய்து வருகின்றது.
இதுநாள் வரை இச்சங்கம் 28 கொலு பொம்மை கண்காட்சிகளை நடத்தி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த வருடமும் நவராத்திரி திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில் எங்கள் சங்கத்தின் சார்பாக புதுவை அரசு கூட்டுறவுத்துறையின் உதவியுடன் கொலு பொம்மை கண்காட்சியை புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் வரும் அக்.24 ஆம் தேதி வரை 28 நாட்களுக்கு நடத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் சுமார் ரூ.60,00,000- மதிப்புள்ள கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ரூ.50,00,000- அளவிற்கு பொம்மைகள் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிறப்பு டெரக்கோட்டா விளக்கு வகைகள் ஆகியவை இந்த கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்படுகிறது.
இக்கொலு பொம்மை கண்காட்சியில் உற்பத்தி விலைக்கே உற்பத்தியாளர்கள் நேரடியாக விற்பனை செய்கின்றார்கள்.
எங்கள் சங்கத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பதிவாளர், புதுச்சேரி கூட்டுறவுத் துறை, மாவட்டத் தொழில் மையம் மற்றும் கைவினை அபிவிருத்தி ஆணையம் (புதுதில்லி) உறுதுணையாக இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம், என்றனர்..
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“