புதுச்சேரியில் எதிர் வரும் ஆங்கில புத்தாண்டு மற்றும் ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயனிகள் அதிகளவில் குவிந்து வருகிறார்கள். இந்நிலையில், நோணாங்குப்பம் படகு குழாமில் பல படகுகள் பழுதடைந்துள்ளது. இதனால், குறைவான படகுகளே இயக்கப்படுகின்றன.
இதன் காரணமாக படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயனிகள் பலர் மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். 40 பேர் படகு மூன்றும், 80 பேர் படகு ஒன்றும் மட்டுமே இயக்கப்படுவதால் சுற்றுலா பயனிகளை காலை 9 மணி முதல் படகு குழாமிற்கு வெளியே பலமணி நேரம் காக்க வைக்கப்பட்டனர். மேலும் பெண்கள் மற்றும் சிறுமியர்கள் கழிவரைக்கு ஒதுங்ககூட முடியாத சூழல் நிலவியது.
இதனால், கோபமடைந்த சுற்றுலா பயனிகள் படகு குழாமிற்கு வெளியே வழங்கப்படும் 10-ரூபாய் நுழைவு கட்டண இடத்தில் சரிமாரி கேள்விகளை எழுப்பி முற்றுகையிட முயன்றனர். மேலும் படகு குழாம் உள்ளே சுமார் ஐம்பது சுற்றுலா பயனிகள் மட்டுமே காத்திருந்த நிலையில் உள்ளே அனுமதிக்காதது, எதிர் வரும் புத்தாண்டிற்கு வரும் சுற்றுலா பயனிகளை அருகே உள்ள தனியார் படகு குழிமிற்கு மடைமாற்றும் செயலாகும் என சுற்றுலா பயனிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.