புதுச்சேரி – பாபு ராஜேந்திரன்
பிரெஞ்சு கலாச்சாரத்துடன் ஜன்னல் புதுச்சேரி என ஜவகர்லால் நேருவால் புகழப்பட்ட பகுதி புதுச்சேரி. பிரான்ஸ் ஆட்சி காலம் முதல் தற்போது வரை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இங்கு பஞ்சம் இருக்காது. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாய் கட்டுபாடுகளுடன் நடந்த இவ்வாண்டு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு ஏதுவாக கிறிஸ்துமஸ் குடில்,ஸ்டார்கள்,மரங்கள், கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் பரிசு பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு 160 வகையான பேப்பர் ஸ்டார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய, இத்தாலி, கொரியன் மற்றும் சீன கிறிஸ்மஸ் பொம்மைகளும் வண்ண வண்ண விளக்குகளும் இங்கு குவிக்கப்பட்டுள்ளன. இம்முறை கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது இந்து, முஸ்லிம் மதவேறுபாடுகள் பார்க்காமல் மக்கள் ஸ்டார்களை வாங்கி செல்கின்றனர். அவர்களுக்காகவே ஆண்டுதோறும் விதவிதமான ஸ்டார்களை அறிமுகப்படுத்துவதாக விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.

நடனமாடும் கிறிஸ்துமஸ் தாத்தா கடைக்கு வரும் மக்களை அதிகமாக ஈர்க்கும் பொருளாகவே உள்ளது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை நடனமாடும் கிறிஸ்து பொம்மையுடன் செல்பி எடுத்துக் கொள்வது மகிழ்வை தருகிறது. கொரோனா மற்றும் கடின வேலையின் காரணமாக மக்கள் மன உளைச்சல் இருக்கும் நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பொருட்களை பார்ப்பதும் வாங்குவது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை காணப்படுகிறது எனவும் உரிமையாளர் தெரிவித்தார்.
கடந்த முறை விட இந்த முறை அதிகமான ஸ்டார்கள் மற்றும் கிறிஸ்மஸ் மரங்கள் வந்துள்ளன. இதை வேடிக்கை பார்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.








தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil