/indian-express-tamil/media/media_files/2025/08/15/rangasamy-1-2025-08-15-14-07-18.jpg)
புதுச்சேரியை அடுத்த வீராம்பபட்டினத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வீரராகவ செட்டியார் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார்.
புதுச்சேரியில் 600 ஆண்டுகள் பழமையான வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் ஆடி 5 ஐந்தாம் வெள்ளி தேர் திருவிழாவில் ஊர் கூடி தேர் இழுக்கும் நிகழ்வில், துணைநிலை ஆளுநர், முதல்வர், சபாநாயகர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் .
புதுச்சேரியை அடுத்த வீராம்பபட்டினத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வீரராகவ செட்டியார் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். ஆற்றில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தி வந்த இவரது மனைவியின் பெயர் புனிதவதி. இருவரும் காலையும், மாலையும் கடவுளை வணங்கி சிவபூஜை செய்து நெறியோடு வாழ்ந்து வந்தனர். ஒழுக்கத்திலும், நடத்தையிலும் சிறந்த வீரராகவ செட்டியார் ஒருநாள் ஊருக்கு மேற்கே உள்ள செங்கழுநீர் ஓடைக்கு சென்று வலையை வீசினார். பலமுறை வலை வீசியும் மீன் சிக்கவில்லை, கடைசியில் கடவுளை வணங்கி வலையை வீசி இழுத்தார். வலை எளிதில் வராமல்
கனத்தது.
பெரிய மீன் சிக்கியது என்று மகிழ்ந்து வலையை கஷ்டப்பட்டு இழுத்துக் கரைக்கு கொண்டு வந்தார். வலையை பிரித்துப்| பார்க்கையில் மீன் இல்லாமல் - பெரிய மரக்கட்டை இருப்பதை அறிந்து மனம் நொந்தார். ஏமாற்றமும் வருத்தமும்
கொண்ட வீரராகவ செட்டியார் அதனை வீட்டிற்கு கொண்டு வந்து கொல்லைப் புறத்தில் போட்டார்.
மரக்கட்டையில் செங்குருதி
ஒருநாள் வீட்டில் அடுப்பு எரிப்பதற்கு வீரராகவ செட்டியாரின் மனைவி காய்ந்த அந்த கோடாரி மரக் கட்டையை
கொண்டு பிளந்தார். அடுத்த கணம் அம்மா என்று அலறினார். கோடாரி பட்ட இடத்தில் செங்குருதி குபீரெனப் பாய்ந்து வந்தது. பதறிய செட்டியாரின் மனைவி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துப் பயத்துடன் கட்டையில் இருந்து ரத்தம் வந்ததைக் கூறினார். இந்தசெய்தி ஊரெல்லாம் பரவியது. இது பரபரப்பாகப் பேசப்பட்டது. இது தெய்வத்தின் அருளே என உணர்ந்த வீரராகவ செட்டியார் அந்த கட்டையை வீட்டிற்குள் கொண்டு வந்து மஞ்சள், குங்குமம், மலர் ஆகியவற்றைச் சாற்றி வழிபட்டு வந்தார்.
ஒருநாள் இரவில் செட்டியார் கனவில், அன்னை சக்தி காட்சி கொடுத்தார். காட்சி கொடுத்த அன்னை பரமேஸ்வரி 'என்னுடைய அருள் வெள்ளத்தின் அடையாளமாக தெய்வ சக்தி நிறைந்த கட்டை உன்னிடம் வந்தது. அதை எடுத்துச்சென்று
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமாதியான சித்தரின் பீடத்திற்கு அருகில் என்னுடைய உருவத்தையும் வைத்து செங்கழுநீரம்மன் என்ற பெயர் சூட்டி வழிபட்டு வருவாயாக, உன் குடும்பத்தையும் ஊர் மக்களையும் காத்தருள்வேன்' என்று அருள் வாக்கினைத் தந்து அன்னை மறைந்தாள்.
பொதுமக்களின் உதவியுடன் அன்னை சொன்ன இடத்தைத் தேடி கண்டுபிடித்தார். அந்த இடம் புதர்களாலும் செடி, கொடி
களாலும் மண்டிக்கிடந்தது. அந்த இடத்தைச் சுத்தம் செய்ய முயன்றபோது, அதில் இருந்த புற்றில் இருந்து நாகம் படமெடுத்
துச் சீறி வெளியே வந்தது. மக்கள் அஞ்சி நடுங்கினர். சீறி வந்த பாம்பு தன் படத்தைச் சுருக்கி பல முறை தரையில்
அடித்து மீண்டும் புற்றுக்குள் சென்று விட்டது. இதனைக் கண்ட மக்கள் அதிசயத்துப் போயினர். இது தெய்வச் செயல்
என்று எண்ணிய மக்கள் நாகம் காட்டிய இடமே கோவில் அமைக்க ஏற்ற இடம் என்று முடிவு செய்தனர். அங்கு
கோவில் அமைக்க மண்ணைத் தோண்டினர். அந்த இடத்தில் ஒரு சமாதியின் மேல் பரப்பு தென்பட்டது. சமாதியை கண்டமக்கள் வியந்து அங்கேயே கோவில் அமைத்திட உறுதி எடுத்தனர். செங்கழுநீர் அம்மன் வீரராகவ செட்டியார் வைத்தி
ருந்த மர கட்டையைப் பீடமாக வைத்து அதற்கு மேல் அன்னை சக்தியின் தலை உருவ சிலையை பிரதிஷ்டை செய்தனர். செங்கழுநீர் அம்மன்' என்று அன்னைக்கு திருநாமம் சூட்டினார்.
புற்றில் இருந்து வந்த நாகம் அவ்வப்போது வெளியில் வந்து அன்னையின் தலை உருவத்தைச் சுற்றிவந்து காவல் காப்பது
போல் நிற்கும். இக்காட்சியை மக்கள் கண்டு பயமும் வியப்பும் கொண்டு வணங்கி வந்தனர்.
சிறு குடிசை கோவிலாக உருவாக்கப் பெற்று தலையை மட்டும் வழிபட்டு வந்த மக்கள், காலப்போக்கில் கோவிலையும் அமைத்து தேவதாரு மரத்தில் முழு உருவமும் உருப் பெற்றது.
தற்போது அம்மன் 4 திருக்கரங்ளுடன் உடுக்கை, கபாலம், வாள், கடப்பாரை ஆகியவற்றுடன் பக்தர்களுக்கு வீற்றிருக்கிறார். அருள் பொழியும் கண்களோடு காட்சித் தரும் அன்னை, கடலை நோக்கி கிழக்குத் திசையை பார்த்து நிற்கிறாள்.
செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.