/indian-express-tamil/media/media_files/2025/05/06/k8BwUIDJyVdg4nc2YibS.jpeg)
Puducherry
புதுச்சேரி அரசு, முருங்கம்பாக்கத்தில் கைவினை கிராமத்தை நிறுவி, மண்பாண்டக் கலைஞர்கள், சிற்பிகள், கைவினைஞர்கள், ஓவியர்கள், தோல் பாவைக்கூத்துக் கலைஞர்கள் மற்றும் பொம்மை தயாரிப்பாளர்களின் படைப்புகளை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இங்கு, சர்வதேச இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையான UNIVERSAL ECO FOUNDATION, பல்வேறு வன உயிரினங்களைச் சிலைகளாக வடிவமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட புலி, சிங்கம், யானை, பாம்பு, மான், ஆமை, டால்பின், குரங்கு உள்ளிட்ட பல உயிரினங்களின் சிற்பங்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி என 18 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்குள்ள உயிரியல் பூங்காக்கள் மற்றும் வனப் பூங்காக்களில் இந்தச் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் "நகர் வனம்" என்ற திட்டத்தின் கீழ், வன உயிரினங்களின் சிற்பங்களை நிறுவி, வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அரசு மக்களுக்கு உணர்த்தி வருகிறது. தற்போது கர்நூல் மாவட்டத்தில் அமையவிருக்கும் நகர் வனத்திற்காக, கடந்த மூன்று மாதங்களாக 20-க்கும் மேற்பட்ட சிற்பிகளும் ஓவியர்களும் இணைந்து பாம்பு, உடும்பு, பூரான், கோட்டான், ஆந்தை, மயில், குயில் போன்ற பல்வேறு உயிரினங்களை ஒரே கல்லில் செதுக்கி வருகின்றனர்.
இப்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்துச் சிற்பங்களும் ஆந்திராவுக்கு அனுப்பப்படும் என்று UNIVERSAL ECO FOUNDATION நிறுவனர் பூபேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.