உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அருங்காட்சியகத்தில் உள்ள அரிய வகையான பழங்கால பொருட்களை ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் என கண்டு ரசித்தனர்.
ஆண்டுதோறும் மே 18 ஆம் தேதி உலக அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை அருகே உள்ள அருங்காட்சியகத்தில் ஒரு நாள் முழுவதும் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
புதுச்சேரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானவர்கள் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டு கண்டு ரசித்தனர்.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அரசர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், போருக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், சேர சோழ பாண்டிய மன்னர் கால நினைவுச் சின்னங்கள், கற்களால் ஆன சிற்பங்கள், பழங்கால அரசர் முகம் பதித்த நாணயங்கள், அரிய வகை அஞ்சல் தலைகள், போர்வாள் கருவிகள், மரச்சிற்பங்கள், மட்பாண்டங்களை, இசைக் கருவிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்த பட்டிருந்தன.
மாணவர்களுக்கு அருங்காட்சியத்தில் இருக்ககூடிய பண்டைய கால பொருட்கள் குறித்தும் அதன் வரலாறுகள் குறித்தும் விளக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“