தமிழ்நாட்டில் மாஸ் என்றால் எம்.ஜி.ஆரில் தொடங்கி அஜித் , விஜய், சூர்யா என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஆனால். புதுக்கோட்டையில் மாஸ் என்றால் அது ஒன்னே ஒன்னு தான். ’முட்டை மாஸ்’ பெயரில மட்டும் இல்லை டேஸ்ட்லையும் மாஸ் தான்.
புதுக்கோட்டையில் இருப்பவர்களுக்கு மட்டும் இல்ல ஆல் ஓவர் தமிழ்நாட்டிற்கே முட்டை மாஸ் ரொம்பவே பழக்கப்பட்ட உணவு தான். அந்த ஊர் காரங்களை கேட்ட தெரியும் அவங்க நாக்க அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு உணவு எதுன்னு. ரெண்டு முட்டை. அதை நல்லா வேகவெச்சு நறுக்கி, தக்காளி, காரப்பொடி போட்டு, குருமாகூட சேர்த்து ஃப்ரை பண்ணி எடுத்தா... மாஸ் ரெடி!
ஆனால், அதை டேஸ்ட் பண்ணும் போது இப்படி டக்குனு முடிச்சிட கூடாது. பக்குவாக எடுத்து, தொக்கோட முட்டையை பிரட்டி அப்படியே இதமா உள்ள அனுப்பனும். புதுக்கோட்டையில் எந்தக் கடை யில் முட்டை மாஸ் சாப்பிட்டாலும் ஒரே டேஸ்ட்தான். அது தான் இந்த டிஷ் டோட ஹைலைட்டே...
அதுலையும், புதுக்கோட்டை முத்துமாப்பிளை கேண்டீன் மாஸுக்கே மாஸ் காட்டர ஒரு கடை. பிரபல சினிமா நட்சத்திரங்கள் கூட காரை நிறுத்தி, இவிங்க கடையில் ஒரு முட்டை மாஸ் வாங்கி டேஸ்ட் பண்ணிட்டு தான் போவங்கனா பாத்கோங்க... ”ம்ம்ம்ம் இவ்வளவு ஃபேமசாக இருந்து என்ன புரோஜனம். புதுக்கோட்டை என்ன பக்கத்துலையா இருக்கு போய் பார்சல் வாங்கிட்டு வந்து சாப்பிட” னு புலம்பு உங்க மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு கேட்டுடீச்சி.. அந்த கவலையை போக்க தான் இந்த ஸ்கிரிப்ட்டே!!!
புதுக்கோட்டை முட்டை மாஸ் வீட்டிலியே செய்யும் ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது ஐஇதமிழ்.
தேவையான பொருட்கள்:
1. வேக வைத்த முட்டை -4
2. தக்காளி -4
3.வெங்காயம் -1
4. கொத்தமல்லி- கறிவேப்பிலை
5. எண்ணெய்
6.பரோட்டா சால்னா
7.மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
8.சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
9.மிளகுத்தூள் - 1/2 ஸ்பூம்
10.மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
11.உப்பு
செய்முறை:
* முட்டையை வேக வைத்து, தோல் உரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* பின்பு, வெங்காயம், தக்காளி, மல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காய - தக்காளி கலவையை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
*அதன் பின்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள்,உப்பு, முட்டை சேர்த்து பதமாக கிளறவும்.
* இப்போது அதில் பரோட்டா சால்னாவை சேர்த்து மிளகுத்தூள் தூவி சுண்ட வதக்கவும்.
*கெட்டி பதம் வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தூவி சுடசுட பரிமாறினால் கடகடவென உள்ளே இறங்கும் முட்டை மாஸ் ரெடி!