Puli sadham recipe, puli sadham in tamil : வெரைட்டி ரைஸ் என்றாலே புளியோதரை தான் முதலிடம் பிடிக்கும். சமைப்பது எளிதானது என்றாலும் இதற்கான தயார் நிலைப் பொருட்களை செய்து முடிப்பதற்கே ஒரு மணி நேரம் ஆகும். அதற்கு இப்படி இன்ஸ்டண்ட் பொடி தயார் செய்து கொண்டால், நேரம் மிச்சமாகும். உங்கள் உடல் உழைப்பும் மிச்சமாகும்.
Advertisment
அதிலும் குறிப்பாக ஐயங்கார் வீட்டு புளியோதரை வாசனை தெரு முழுக்க வீசும். அதற்கு முக்கியமான காரணமே நல்லெண்ணெய் தான். நீங்களும் முடிந்தவரை இந்த டிஷை நல்லெண்ணெய்யில் செய்யுங்கள்.
* புளியை கெட்டியாக 1 கப் அளவுக்கு கரைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
Advertisment
Advertisements
* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
* பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
* புளி பச்சை வாசனை போய் திக்கான பதம் வந்து எண்ணெய் ஓரங்களில் பிரிய ஆரம்பித்ததும் பொடித்த பொடியில் 3/4 டேபிள்ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
* புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
* 1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையோ சுவை.
* ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.