ஒரு முறை இப்படி புளியோதரை மிக்ஸ் செய்யுங்க. 2 மாதம் வரை கெட்டுப்போகாது.
தேவையான பொருட்கள்
50 கிராம் புளி
சூடான தண்ணீர்
வத்தல் 35
1 ½ டேபிள் ஸ்பூன் மல்லி
கால் ஸ்பூன் வெந்தயம்
70 எம் .எல் நல்லெண்ணை
1 டீஸ்பூன் கடுகு
2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
4 டேபிள் ஸ்பூன் வேர்கடலை
3 கொத்து கருவேப்பிலை
1 ½ டீஸ்பூன் மஞ்சள் பொடி
2 டீஸ்பூன் பெருங்காயப் பொடி
உப்பு தேவையான அளவு
கொஞ்சம் வெல்லம்
செய்முறை: புளியில் சூடான தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். தொடர்ந்து இதை கரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வத்தல் எடுத்து வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை எடுத்து வைக்கவும். மல்லியை தனியாக வறுக்க வேண்டும். பாதி வெந்தயத்தை வறுத்து வைத்துகொள்ளவும். வறுத்த வத்தலில் பாதி, மல்லி, வெந்தயத்தில் பாதியை அரைத்து வைக்கவும். தொடர்ந்து மீதி உள்ள வத்தலை தனியாக அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் போட்டு வதக்க வேண்டும். தொடர்ந்து கடலை பருப்பு, கருவேப்பிலை, வேர்கடலை மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து இதில் புளி கரைத்தை சேர்த்து கிளரவும். தொடர்ந்து. இதில் வத்தல் அரைத்ததை சேர்த்து கிளரவும். தொடர்ந்து மல்லி, வத்தல், வெந்தயம் அரைத்ததை சேர்த்து கிளரவும். தொடர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளரவும். கடைசியாக வெல்லம் சேர்க்கவும்.