10 ஆண்டுகள் முன்பு அலுவலகங்களுக்கு, தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் பேட்ச்லர்கள், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சரியாக 12 மணிக்கு வீடு தேடி கேரியர் சாப்பாடு ஒரு கூடையில் வரும். இந்த கூடையில் மதிய சாப்பாடு கேரியரில் வைக்கப்பட்டிருக்கும். அந்த சாப்பாட்டை போடு சாப்பிடுவதற்கு வாழை இலையும் அனுப்பப்படும்.
சில இடங்களில் அந்த சாப்பாட்டை எடுத்து வருபவர்களே பரிமாறி விட்டு, காலி கேரியரை திரும்பி எடுத்து செல்வார்கள். இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கேரியர் டிப்பன் பாக்ஸ் ஆகி, டிப்பன் பாக்ஸ் பார்சலாக மாறி கடைசியில் பார்சல் யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிகாக உருமாறியது. சாப்பாட்டை ஆர்டர் செய்தால் அது பிளாஸ்டிக் டப்பாவில் வரும். அதை சாப்பிட்டு விட்டு குப்பையில் எறிந்து விட்டு செல்லலாம். இது தான் இப்போது கரண்டில் ஓடிக் கொண்டிருக்கும் பழக்கம்.
ஆனால், தற்போது மகாராஷ்ட்ராவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலம் முழுவதும் கேரியர் சாப்பாடு பழக்கம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்புக் கொள்கை பல்வேறு மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக மகாராஷ்ட்ராவில் பிளாஸ்டிக் பொருட்கள், பைக்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/1111-54-1024x576.jpg)
இதனால் ஹோட்டலில் இருந்து உணவுகளை வீட்டிற்கு வாங்கி செல்வோர்களுக்கு சில்வர் கேரியர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு பார்சல் வாங்கி செல்வோர்களுக்கு அவர்களுக்கு ஆர்டர் செய்த உணவுகளை ஹோட்டல் உரிமையாளர்கள் கேரியரில் வைத்து அனுப்புக்கின்றனர். வாடிக்கையாளர்கள் அந்த கேரியரை எடுத்து சென்று சாப்பிட்ட பின்பு மீண்டும் ஹோட்டலுக்கு வந்து கேரியரை ஒப்படைக்க வேண்டும். இந்த கேரியருக்கு முன்பணமாக 200 ரூபாயும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.
அவர்கள், கேரியரை திரும்பி தரும் போது அந்த முன்பணத்தை பெற்றுக் கொள்ளலாம். மகாராஷ்ட்ரா மக்களிடம் இந்த கேரியர் சாப்பாடு முறை நல்ல வரச்வேற்பை பெற்றுள்ளது. அதே நேரம் ஆன்லைன் உணவு ஆப்களான ஸ்விகி, ஸோமேட்டோ அடிப்படையில் கீழ் இயங்கும் சில உணவகங்களில் இந்த வசதி செயல்படுத்தப்பாடமல் உள்ளதால் பொதுமக்கள் பலர் சிரமங்களை சந்தித்துள்ளனர். இதனால் அந்நிறுவனங்கள் மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் தடையில் இருந்து 3 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.