புனே நகரம் மராட்டிய மாநிலத்தில் மும்பைக்கு அடுத்த மிகப் பெரிய வளர்ந்து வரும் நகரமாகும். இந்த நகரம் புனாவாடி, புண்ய நகரி, பூனா என்றும் அழைக்கப்பட்டுகின்றது. எனவே புனேயில் இருந்து பல இடங்களுக்கு நாம் வார இறுதி விடுமுறைகளில் பயணிக்க முடியும்.
அதனால் புனேவிலிருந்து வார இறுதி விடுமுறை நாளுக்கு பயணிக்கத் தக்க இடங்களின் விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
துர்ஷெட்
புனேவிலிருந்து வெறும் 100 கிமீ தொலைவில் துர்ஷெட் அமைந்துள்ளது. என்னவெல்லாம் செய்வது, எப்போது செல்வது, எப்படி செல்வது, உள்ளிட்ட தகவல்களை இப்போது காண்போம். பன்வேல் நகரத்திலிருந்து துர்சேத்துக்கு கேப் வசதிகள் உள்ளன. வெறும் அரை மணி நேர பயணம்தான் எளிதில் சென்று விடலாம்.
ஆனால் சாலை வழியே என்றால், புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில் பயணித்து காலாபூர் டோல்கேட் தாண்டியவுடன் கோபோலி - பாலி சாலைக்கு திரும்பி எளிதில் துர்செத்தை அடையமுடியும்.
எப்போது செல்வது?
இங்கு பயணம் செய்ய ஏற்ற மாதங்களாக, அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, செப்டம்பர் மாதங்கள் உள்ளன.
என்னென்ன செய்வது?
இங்கு செல்லும் சுற்றுலாவாசிகள், ரிவர் ராப்டிங், டிரெக்கிங், ஹைக்கிங், காயாக்கிங் செய்யலாம்.
மாத்தேரன்
மாத்தேரன், புனேவிலிருந்து வெறும் 120 கிமீ தொலைவில் உள்ளது. சிவாஜி டெர்மினலிலிருந்து புறநகரான கல்யாணுக்கு பயணிக்கலாம். அங்கிருந்து நேரல் எனும் ரயில் நிலையத்தை அடைய வேண்டும். நேரலிலிருந்து ஆட்டோ ரிக்ஸாக்களும், வாடகை வாகனங்கள் மூலம் மாத்தேரனுக்கு செல்ல முடியும்.
எப்போது செல்வது?
இங்கு அக்டோபர், நவம்பர்,டிசம்பர்,ஜனவரி,பிப்ரவரி,மார்ச்,ஏப்ரல்,மே ஆகிய மாதங்களில் செல்லலாம்.
என்னென்ன செய்வது?
மலையேற்றம், நடைபயிற்சி, குதிரை ஏற்றம், பள்ளத்தாக்கு பயணம் இயற்கையை ரசித்தல். நேரல் - மாத்தேரன் பொம்மை ரயில் பயணம் பேன்றவற்றைக் காணலாம்.
அலிபக்
புனேவிலிருந்து அலிபக் நகரம் வெறும் 142 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு என்னவெல்லாம் செய்வது, எப்போது செல்வது, எப்படி செல்வது, உள்ளிட்ட தகவல்களை காண்போம். பன்வேலிலிருந்து 60 கிமீ தொலைவில் ஏறக்குறைய அமைந்துள்ளது.
எப்போது செல்வது?
இந்த பகுதிக்கு செல்வதற்கு உகந்த மாதங்களாக, அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகியன உள்ளது.
என்னென்ன செய்வது?
பறவை காணுதல், நீர் விளையாட்டுகள்
கம்ஷெட்
புனேவிலிருந்து வெறும் 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள நகரம் தான் கம்ஷெட். பன்வேலிலிருந்து புனே செல்லும் வழியில் 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
எப்போது செல்வது?
இங்கு சுற்றுலா செல்பவர்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் செல்லவது நல்லது.
என்னென்ன செய்வது
மலையேற்றம், படகு பயணம், பாராகிளைடிங், நீச்சல், ராக் கிளைம்பிங்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.