மஹராஷ்டிரா மாநிலம் புனேவில், இறந்த தன் மகனின் சேமிக்கப்பட்ட விந்தணுக்கள் மூலம் வாடகைத் தாய் மூலமாக, இரட்டை குழந்தை பிறந்திருப்பதால், பெண் ஒருவர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
புனேவை சேர்ந்த ராஜஸ்ரீ படில் என்பவரது மகன் பிரதாமேஷ் படில். பிரதாமேஷ் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜெர்மனில் படித்துக் கொண்டிருக்கும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் வேதனையில் ஆழ்ந்தது.
இந்நிலையில், கீமோதெரபி சிகிச்சையின்போது விந்தணுக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவற்றை பாதுகாக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள். அவ்வாறே, பிரதாமேஷ் விந்தணுக்கள் பாதுகாக்கப்பட்டன.
இந்நிலையில், 2013-ஆம் ஆண்டு பிரதாமேஷின் நிலைமை மிகவும் மோசமாகவே, அவரை பெற்றோர் இந்தியாவுக்கு வரவழைத்தனர். மும்பையில் உள்ள மருத்துவமனையில் பிரதாமேஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2016-ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.
இதன்பின், தன் மகனின் நினைவுடன் வாழ்வதற்காக, அவரது தாயார் ராஜஸ்ரீ, பல்வேறு நடைமுறைகளுக்குப் பின்னர் ஜெர்மனியில் பாதுக்காக்கப்பட்டிருந்த பிரதாமேஷின் விந்தணுக்களை இந்தியா வரவழைத்தார்.
இதையடுத்து, சஹ்யாத்ரீ மருத்துவமனையில், பிரதாமேஷின் விந்தணுக்கள் மூலம் வாடகைத்தாய் ஒருவரை ஏற்பாடு செய்து குழந்தை பிறக்க நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கடந்த திங்கள் கிழமை
ஒரு ஆண்ட் மற்றும் பெண் என இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதனால், ராஜஸ்ரீ மகிழ்ச்சி அடைந்துள்ளார்.