பம்பர் பரிசுனா இது தான்... வெறும் 200 ரூபாய்க்கு கூரையை பிச்சுட்டு கொட்டிய 2 கோடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
punjab lottery prize, பஞ்சாப்

punjab lottery prize, பஞ்சாப்

200 ரூபாய் வைத்து 2 கோடி சம்பாதிக்க முடியுமென்றால் உங்களால் நம்ப முடியுமா? சாத்தியமில்லை தானே? ஆனால் பஞ்சாப் அரசாங்கத்தின் லோரி பம்பர் லாட்டரியை வென்றார் ஒரு கான்ஸ்டபில் அஷோக் குமார். அதுவும் ஆயிரத்தில் இல்லை, முழுசா  2 கோடி ரூபாய் வென்றார்.

Advertisment

அஷோக் குமார் தற்போது ஹோசியர்பூர் மாவட்டத்தின் சதர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். 29 வயதான இவர் 2010ம் ஆண்டு காவல்துறை பணியாற்ற துவங்கினார். இவர் ஒரு நாள் 200 ரூபாய் கொடுத்து 2 கோடி ரூபாய்க்கான லாட்டெரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

பஞ்சாப் காவலருக்கு அடித்த பம்பர் பரிசு

கடந்த ஜனவரி 16ம் தேதி லாட்டரி விற்பனையாளர் அஷோக்கிற்கு தகவலை தெரிவித்திருக்கிறார். இது பற்றி அஷோக் கூறும்போது, “எனக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் எல்லாம் இல்லை. காவல் நிலையத்திற்கு வந்த லாட்டரி டிக்கெட் விற்பனையாளர், என்னை ஒரு டிக்கெட் வாங்கும்படி கூறிக் கொண்டே இருந்தார். தீபாவளி பண்டிகை நேரத்தில் எல்லாம் ஒரு லாட்டரி டிக்கேட் வாங்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு ஒரு நாள் ஒரு முயற்சி எடுப்போம் என்று தான் வாங்கினேன். முதலில் அது கைக் கூடவில்லை.

பின்னர் இரண்டாவது முறையாக லோரி நேரத்தில் ஒன்று வாங்கினேன். அது தான் இப்போது எனக்கு கைக் கொடுத்திருக்கிறது.

Advertisment
Advertisements

லாட்டரி விற்பனையாளர் இந்த விஷயத்தை எனக்கு ஜனவரி 16ம் தேதியே கூறிவிட்டார். ஆனால் அரசுப்பூர்வமான தகவல் வரும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என நான் தான் ரகசியமாக வைத்திருந்தேன்” என்றார்.

மேலும், “பரிசு தொகையை வென்றது என்னால் இப்போது வரை நம்பவே முடியவில்லை. என்னை போன்ற ஒரு நடுத்தர குடும்பத்தினர் இந்த தொகையை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தொகை எனக்கான சில கடமைகளை நிறைவடையச் செய்ய உதவும். கடன் தொல்லை போன்றவற்றையெல்லாம் யோசிக்காமல் இனி எனது பணியை சிறப்பாக செய்ய முடியும்.” என்றார்.

2 கோடி ரூபாயில், 30% வரிப் பணம் போக மிச்சம் இருக்கும் பணம் அவருக்கு லாட்டரி பரிசாக கொடுக்கப்படும்.

Punjab

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: