நான் நார்த் இந்தியன் தான்! ஆனா எந்த தமிழ் பொண்ணு இவரை கல்யாணம் பண்ண வந்தாங்க- அனிதா குப்புசாமி ஓபன் டாக்

என்னை நார்த் இண்டியன் திட்டுறீங்களே நா ஒன்னு கேட்கிறேன். எந்த தமிழ் பெண் இவரை கல்யாணம் பண்ணிக்க முன்வந்தாங்க? எத்தனையோ தமிழ் பாட்டு பாடுனாரு. பாடுறதுக்கு வா கூப்பிடும் போது எந்த தமிழ் பெண்ணும் வந்து பாடிச்சு.

என்னை நார்த் இண்டியன் திட்டுறீங்களே நா ஒன்னு கேட்கிறேன். எந்த தமிழ் பெண் இவரை கல்யாணம் பண்ணிக்க முன்வந்தாங்க? எத்தனையோ தமிழ் பாட்டு பாடுனாரு. பாடுறதுக்கு வா கூப்பிடும் போது எந்த தமிழ் பெண்ணும் வந்து பாடிச்சு.

author-image
WebDesk
New Update
Anitha Kuppusamy

Pushbavanam Kuppusamy Anitha Kuppusamy

தமிழ்த் திரையிசை உலகில் எண்ணற்ற பாடகர்கள் இருந்தாலும், சிலரின் குரல்கள் மட்டுமே கிராமிய மண்ணின் மணத்துடன் நம் மனதில் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்டவர்களில் முதன்மையானவர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. தனது தனித்துவமான குரலாலும், கிராமிய இசை மீதான காதலாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர். குப்புசாமியின் குரல், வயல்வெளிகளின் பாட்டாகவும், கிராமத்துத் திருவிழாக்களின் உற்சாகமாகவும், பாசமுள்ள தாயின் தாலாட்டாகவும் ஒலித்தது.

Advertisment

இவரது வெற்றிக்குப் பின்னால், அவருடைய மனைவி அனிதாவின் ஆதரவும், பங்களிப்பும் மிக முக்கியமானது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகும் இருவரும் இணைந்து நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, மேடை நிகழ்ச்சிகளில் கலக்கி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர். அவரது கணவரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் அனிதா குப்புசாமியின் இசைப் பயணத்திற்கு ஒரு பலமான தூணாக அமைந்தது. கணவன்-மனைவியாக மட்டுமின்றி, கலைத்துறையிலும் அவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக உள்ளனர். 

Advertisment
Advertisements

இந்நிலையில் தன்னை நார்த் இண்டியன் என்று குத்திக்காட்டி பேசுபவர்களுக்காக சரமாரியான பதிலை அவள் விகடனுக்கு அளித்த நேர்காணலில் மனம் உடைந்து பேசினார் அனிதா குப்புசாமி. 

”என்னை நார்த் இண்டியன் திட்டுறீங்களே நா ஒன்னு கேட்கிறேன். எந்த தமிழ் பெண் இவரை கல்யாணம் பண்ணிக்க முன்வந்தாங்க? எத்தனையோ தமிழ் பாட்டு பாடுனாரு. பாடுறதுக்கு வா கூப்பிடும் போது எந்த தமிழ் பெண்ணும் வந்து பாடிச்சு. என்னை நார்த் இண்டியன்னு திட்டுறீங்களே.. நான் நார்த் இண்டியனாவே இருந்துட்டு போறேன்.

ஆனா தமிழ் பெண் எல்லாம் என் கணவரோட நிறத்தைப் பாத்துட்டு புறக்கணிச்சுட்டு போனாங்களே” என்று தன் ஆதங்கத்தை அனிதா குப்புசாமி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: