உலகப் பிரசித்திபெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மல்லிகை, முல்லை, கணகாம்பரம் என 17 வகை பூக்கள் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாள், ஏழுமலையான் என்று பக்தர்களால் வணங்கப்படும் ஏழுமலையான் கோயிலில் அண்மையில் பிரம்மோற்சவம் விழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க எல்லா நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கூட திருப்பதிக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/10/aSKmkaDK6T8GxNUCjGTj.jpg)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் முடிந்த பின்னர் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமிக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள சம்பங்கி மண்டபத்தில் காலை உற்சவ மூர்த்திகளான சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, மாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ரோஜா, சாமந்தி, சம்பங்கி, துளசி என 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
புஷ்ப யாகத்திற்காக தற்காக 7 டன் மலர்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் இருந்து 5 டன் மலர்களும், தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தலா 1 டன் என 2 டன் மலர்களும் என மொத்தம் 7 டன் மலர்கள் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த புஷ்ப யாகத்திற்காக முல்லை, மல்லி, கனகாம்பரம், சாமந்தி, ரோஜா, சம்பங்கி, துளசி உள்ளிட்ட 17 வகையான மலர்கள் பயன்படுத்தப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/2024/11/10/9ik60BuV6CgSuDU5ZA8t.png)
தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கடைய்ய சவுத்ரி தலைமையில் கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அந்த 7 டன் மலர்க் கூடைகளையும் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் சிறப்பாக செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“