இதுதான் மங்கி டான்ஸ் வொர்க் அவுட்.. அனிதா குப்புசாமி மகள் டிரெண்டிங் வீடியோ

பல்லவி பாடகர், மருத்துவர், இன்ஃபுளூயன்சர், ஃபிட்னெஸ் ஆர்வலர் என பன்முகத்திறமை கொண்டவர்.

இதுதான் மங்கி டான்ஸ் வொர்க் அவுட்.. அனிதா குப்புசாமி மகள் டிரெண்டிங் வீடியோ
Pallavi Agarwal monkey dance work out video

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.

குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள்.

இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார். இவருக்கும், ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது.

பல்லவி பாடகர், மருத்துவர், இன்ஃபுளூயன்சர், ஃபிட்னெஸ் ஆர்வலர் என பன்முகத்திறமை கொண்டவர். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில், பல்லவி தன் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

https://tamil.indianexpress.com/wp-content/uploads/2022/08/297775722_1252434562223654_2707703055333139367_n.mp4
மங்கி டான்ஸ் வொர்க் அவுட்

அதில் பல்லவி, அதிகமா பிரியாணி சாப்பிட்டதுக்கு மங்கி டான்ஸ் வொர்க் அவுட் தண்டனை என ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் தலைப்பக்கவாட்டில் இரு கைகளையும் வைத்து, இரு கால்களையும் தூக்கி குரங்கு போலவே டான்ஸ் ஆடுகின்றனர். அதைப் பார்க்கும் போதே செம காமெடியாக இருக்கிறது.

இனி நீங்களும் அதிகமா சாப்பிட்டா இந்த மங்கி டான்ஸ் வொர்க் அவுட் பண்ணுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Pushpavanam kuppusamy daughter pallavi agarwal monkey dance work out video