Advertisment

டசர்ட் சஃபாரி, ரோலர் கோஸ்டர்.. புஷ்பவனம் குப்புசாமி பொண்ணு ஹனிமூனுக்கு எங்க போயிருக்காங்க தெரியுமா?

குப்புசாமி- அனிதா தம்பதியின் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார். இவருக்கும், ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

author-image
WebDesk
Mar 23, 2022 15:28 IST
New Update
pallavi agarwal

pushpavanam kuppusamy daughter pallavi agarwal went dubai for honeymoon

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.

Advertisment

குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள்.

இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார். இவருக்கும், ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது.

மேலும் மகளின் திருமணம் அன்று நடந்த நிகழ்வுகளை அனிதா தனது யூடியூபில் நேரலையாக பதிவிட்டார். சமீபத்தில்’ பல்லவி தனது கணவருடன் ஹனிமூன் சென்ற வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

அபுதாயில் உள்ள ஃபெராய் வேர்ல்ட், துபாய் எக்ஸ்போ 2020 ஆகிய இடங்களை சுற்றி பார்த்த பல்லவி, அங்குவைத்து தனது கணவருடன் முதல் மாத அனிவர்சரியை கொண்டாடினார்.

பிறகு துபாயின் பிரபலமான பாலைவன சஃபாரி சென்ற பல்லவி, உலகின் வேகமான ரோலர் கோஸ்டர், துபாய் க்ளோபல் வில்லேஜ் என பயங்கரமாக ஊர்சுற்றி என்ஜாய் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். இங்கே பாருங்க!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment