/indian-express-tamil/media/media_files/2025/05/07/Ri4Ucl72emJY6uWjLrHa.jpg)
இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் வசிப்பவர்களுக்கு சொந்தமாக நிலம் என்பது அரிதான ஒன்று. ஆனால், இயற்கையின் மீதான ஆர்வமும், சொந்தமாக காய்கறிகளையும், பழங்களையும் விளைவிக்க வேண்டும் என்ற ஆசையும் பலருக்கு இருக்கிறது.
இந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய மாடித் தோட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அந்த வகையில், மாடித் தோட்டத்தில் மாதுளைச் செடி வளர்ப்பது மிகவும் சுலபமானதும், பலன் தரக்கூடியதுமான ஒரு முயற்சியாகும்.
மாதுளை, மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பழம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. மேலும், இது இரத்த சோகை, இதய நோய்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாதுளைப் பழங்களை உங்கள் வீட்டு மாடியிலேயே விளைவிப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
மாடித்தோட்டத்தில் வளர்க்கும் மாதுளைச் செடியை பராமரிப்பதற்கான சில டிப்ஸ்களை புஷ்பவனம் குப்புசாமி தெரிவித்துள்ளார். அந்த வகையில், செடியின் வேர் காய்ந்து விட்டால் அதன் பூக்கள் கொட்டி விடும் என்று அவர் கூறுகிறார். அதன்படி, செடி இருக்கும் மணலை சற்று கிளறி பார்க்கும் போது ஈரப்பதம் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர மாதுளை செடிக்கு மண் புழு உரம் போடலாம் என்று புஷ்பவனம் குப்புசாமி அறிவுறுத்துகிறார். இதேபோல், பஞ்சகவ்விய உரமும் பயன்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார். இது தவிர பூச்சித் தொல்லை இருந்தால், சிறிது வேப்பெண்ணெய் மற்றும் சோப்பு கரைசல் சேர்த்து தெளிக்கலாம்.
மாதுளைச் செடி நடவு செய்தவுடன் உடனே காய்க்காது. பொறுமையாக பராமரித்து வந்தால், ஒரு சில வருடங்களில் உங்கள் மாடித் தோட்டம் சுவையான மாதுளைப் பழங்களால் நிரம்பி இருக்கும். நீங்களும் உங்கள் மாடித் தோட்டத்தில் மாதுளைச் செடியை வளர்த்து, அதன் மருத்துவ குணங்களையும், சுவையையும் பெறலாம். இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விளைவிப்பதால், ஆரோக்கியமான பழங்கள் நமக்கு கிடைக்கும்.
நன்றி - Anitha Pushpavanam Kuppusamy - Viha Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.