புதினா நிலக்கடலை சேர்த்து சட்னி அரைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
அரைக்க
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
பச்சை மிளகாய் - 5
புளி - நெல்லிக்காய் அளவு
இஞ்சி - சிறிய துண்டு
வேர்க்கடலை - 1/4 கப்
தேங்காய் - 1/4 மூடி
தாளிக்க
கடுகு
உளுந்தம் பருப்பு
எண்ணெய் - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை: முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்தும் அவற்றோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்தும் அரைத்துகொள்ளவும். பின்னர் அவற்றை எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்போது நீங்கள் விரும்பிய புதினா நிலக்கடலை சட்னி தயாராக இருக்கும். அவற்றை உங்கள் உணவுகளோடு சேர்த்து ருசிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“