புதினா, இஞ்சி சேர்த்து சுவையான மற்றும் புது விதமான சிக்கன் கிரேவி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 4
இஞ்சி- பெரியது
பூண்டு – 8
பச்சை மிளகாய் – 8
புதினா – 2 கப்
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 4
ஏலக்காள் – 2
எலுமிச்சைச் சாறு – 1/2 கப்
தயிர் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். பிறகு பெரிய வெங்காயத்தை நறுக்கவும். மிக்சியில் நறுக்கிய வெங்காயத்தில் பாதி, புதினா, மல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலம் அனைத்தையும் போட்டு நைசாக அரைக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தில் மீதம் உள்ளதைப் போட்டு சிறிது உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் சிக்கனை சேர்க்கவும். தீயை சிம்மில் வைக்கவும். நன்கு வதங்கியதும் பின் இதில் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும். அடுத்து இதில் தயிர், எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஒரு 10 நிமிடம் கிளறி இறக்கினார் சுவையான புதினா, இஞ்சி சிக்கன் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“