scorecardresearch

முகப்பருக்கள் மறைய வீட்டிலிருக்கும் இந்த பொருள் போதும் – புது புது அர்த்தங்கள் பார்வதி பியூட்டி சீக்ரெட்ஸ்!

Puthu Puthu Arthangal Actress Parvathy Beauty Secrets Tamil News பொடுகு பிரச்சனை நீங்க, தினமும் அல்லது இரண்டு நாளுக்கு ஒருமுறை தலை குளிப்பது நல்லது.

Puthu Puthu Arthangal Actress Parvathy Beauty Secrets Tamil News
Puthu Puthu Arthangal Actress Parvathy Beauty Secrets Tamil News

Puthu Puthu Arthangal Actress Parvathy Beauty Secrets Tamil News : 100 எபிசோடுகளை கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ‘புது புது அர்த்தங்கள்’ தொடரின் முன்னணி நடிகை பார்வதி. சமீபத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்றுவரும் இவருடைய ஸ்கின்கேர் சீக்ரெட்டுகளை பகிர்ந்துகொண்டார்.

“சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். அதிலும், கேமரா முன்பு நாள்தோறும் இருக்கிறோம். அப்போது இன்னும் எக்ஸ்ட்ரா கவனிப்பு தேவை. நான் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் நேரத்தில் ஏராளமான பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றுவேன்.

அதிலும், நம் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்துதான் என்னுடைய ஸ்கின்கேர் ட்ரீட்மென்ட்டுகளை செய்துகொள்வேன். எதுவுமே இல்லை என்றாலும், அரிசி கழுவிய தண்ணீர் போதும். அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் சேமித்து காலையில் முகம் கழுவிய பிறகு ஸ்ப்ரே செய்து வந்தால் நிச்சயம் முகப்பரு உள்ளிட்ட பல சரும பிரச்சனைகள் விலகும்.


அதேபோல, கடலை மாவு, தயிர், பாலாடை, தேன், தக்காளி, ஐஸ் கட்டி உள்ளிட்ட பல கிச்சன் பொருள்களிலேயே சருமத்தை காத்துக்கொள்ளமுடியும். அதேபோல, பீட்ருட், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை உட்கொள்வது மட்டுமல்லாமல், வெளிப்புற சருமத்தில் பேக் போன்று செய்து அப்லை செய்தாலும் நல்ல பொலிவு கிடைக்கும்.

பொடுகு பிரச்சனை நீங்க, தினமும் அல்லது இரண்டு நாளுக்கு ஒருமுறை தலை குளிப்பது நல்லது. தலையில் எண்ணெய் பசை அதிகம் இருந்தால் பொடுகு தொல்லையும் அதிகம் இருக்கும். எனவே தலையை சுத்தமாக வைத்திருந்தால் பொடுகு பிரச்சனை வராது. என்னதான் இப்படி பார்த்து பார்த்து சருமத்தை பராமரித்து வந்தாலும், தண்ணீர் குடிப்பதுதான் மிக முக்கியமான விஷயம். சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருந்தாலே நிச்சயம் அது ஆரோக்கியமாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Puthu puthu arthangal actress parvathy beauty secrets tamil news

Best of Express