கோவையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் முயற்சியாக 5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்யும் வினோத உலக சாதனை நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருநங்கைகளின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும், மேக்கப் கலையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் திருநங்கைகளும் சாதிக்கலாம் எனும் தலைப்பில் கோவை தடாகம் சாலையில் உள்ள ஜெ.எஸ்.அழகு கலை பயிற்சி நிலையத்தில் ஒப்பனை கலை சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஒப்பனை கலைஞர்கள் தங்களது அழகு கலையை பயன்படுத்தி 21 திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் ஐந்து நிமிடத்தில் ஒப்பனை செய்து அசத்தியுள்ளனர்.21 திருநங்கைகளை வரிசையாக அமர வைத்த சாதனை குழுவினர்,திருநங்கைகளுக்கு,கண்களை அழகு படுத்துவது,லிப்ஸ்டிக் மற்றும் முக அழகை கூட்டுவது என ஐந்து நிமிடத்தில் மணப்பெண்கள் போல முழு மேக்கப் செய்து அசத்தினர்.

குறைந்த நேரத்தில் குழுவாக செயல்பட்டு செய்த இந்த ஒப்பனை நிகழ்ச்சிஜாக்கி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.ஒரே நேரத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து வினோத உலக சாதனை நிகழ்ச்சியை நடத்திய குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான். கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“