PV Sindhu Public Appearances : பேட்மிண்டன் உலக தரவரிசையில், தங்கப்பதக்கத்துடன் முதலிடம் பிடித்த இந்தியர் என்ற வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறார், இந்தியாவின் பி.வி.சிந்து. பேட்மிண்டன் கோர்ட்டில் அவரது திறமைகள் வெளிப்படுவதைப் போலவே, தனது மற்ற தேர்வுகள் மூலமும் நம்மை கவர்கிறார். வித்தியாசமான தோற்றத்துடன் பி.வி.சிந்து வலம் வந்த சில படங்களை இங்கே பார்ப்போம்...
PV Sindhu
சமீபத்தில், வடிவமைப்பாளர்கள் சாந்தனு மற்றும் நிகில் ஆகியோர் வடிவமைத்த உடையில் அழகாக தோற்றமளித்தார் சிந்து. போர்னாலி கால்டீரா ஸ்டைலிங் செய்திருந்தார், ஒரு முழு ஸ்லீவ் வைத்த ஊதா நிற டாப்பும், மல்டி-ஹியூட் சீக்வின் பாவாடையுடன், ஸ்மோக்கி ஐஸ் மேக்கப்புடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கலந்துக் கொண்டார்.
PV Sindhu
'சஹாரா இந்தியா பரிவாரின்' தலைவரான சுப்ரதா ராய் பி.வி.சிந்துவை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். அந்த நிகழ்வில் அவர், வெளிர் நிற உடையில் ஜொலித்தார். ஃப்ளோரல் டிஸைன் அவருக்கு அழகாகவும், எளிமையாகவும் இருந்தது.
பி.வி.சிந்து
வடிவமைப்பாளர் ஸ்ரியா பூபாலின் கனவு வடிவமைப்பில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் சிந்து. பிங்க் நிற ரஃபிள் டாப்பும், லாங் ஸ்கர்ட்டும் அவருக்கு அத்தனை அழகாக இருந்தது. அழகிய காதணிகளுடன் லூஸ் ஹேர் படு ஜோர்!
PV Sindhu
புகைப்படக் கலைஞர் டபூ ரத்னானியுடன் ஃபோட்டோ ஷூட்டில், லவ்பேர்ட்ஸ் லேபிளிலின், ‘ஏ சிமிட்ரிக்கல், மியூட்டட் ஷேட் உடையில்’ பி.வி.சிந்து தோற்றமளித்தார். மெஸ்ஸி போனிடைல் ஹேர் ஸ்டைலில், ஸ்னீக்கர்ஸ் அத்தனை பொருத்தமாக இருந்தது சிந்துவுக்கு!