Traditional Christmas Gingerbread Recipe Tamil : பிரிட்டிஷ் அரச குடும்பம் கிறிஸ்துமஸுக்கு தயாராகி வருகிறது. அவர்களின் பாரம்பரிய அரச விருந்து, இந்த கொண்டாட்டங்களின் ஒருங்கிணைந்த ஓர் பகுதியைக் குறிக்கிறது. கிளாசிக் வான்கோழி உணவு முதல் புட்டிங் வரை, கிறிஸ்துமஸ்-சிறப்பு உணவு வகைகளை அரச குடும்பம் அனுபவிக்கின்றனர்.
ஆனால் இப்போது, நீங்களும் அவர்களுடைய கிறிஸ்துமஸ் விருந்தின் சுவையை அனுபவிக்கலாம். ராயல் சமையலறையைச் சேர்ந்த சமையல்காரர்கள் சமீபத்தில் தங்கள் பாரம்பரிய கிறிஸ்துமஸ் ஜிஞ்சர்பிரெட் ஹவுஸ் செய்முறையை தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1000 கிராம்
சோடா பைகார்பனேட் - 14 கிராம்
இஞ்சி விழுது - 28 கிராம்
இலவங்கப்பட்டை பொடி அல்லது சின்னமன் - 14 கிராம்
வெண்ணெய் (உப்பு சேர்க்காதது) - 355 கிராம்
வெளிர் ப்ரவுன் சர்க்கரை - 500 கிராம்
முட்டை - 140 கிராம்
கோல்டன் சிரப் - 175 கிராம்
செய்முறை
* மாவு, பைகார்பனேட் மற்றும் மசாலாப் பொருள்களை ஒன்றாகக் கலக்கவும்.
* அதனோடு குளிர்ந்த வெண்ணெய் சேர்த்து, நொறுக்கும் நிலை வரும் வரை தொடர்ந்து கலக்கவும்.
* சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
* பிறகு முட்டை மற்றும் சிரப் சேர்த்து மாவு உருவாகும் வரை கலந்து விடவும்.
* 2 தொகுதிகளாகப் பிரித்து, கையால் பிசைந்து தட்டையாக்கவும்.
* ஹவுசின் பாகங்களுக்கு சுமார் 5 மிமீ தடிமன் மற்றும் சிறிய அலங்கார பாகங்களுக்கு சுமார் 3 மிமீ வரை மாவை உருவாக்குவதற்கு முன் சில மணி நேரம் அதனைப் போர்த்திக் குளிர வைக்கவும்.
* ஜிஞ்சர்பிரெட் வீட்டு வடிவங்களை வெட்டுங்கள்.
* அதனை பேக்கிங் தட்டுகளில் வைத்து, பேக்கிங் செய்வதற்கு முன்பு மீண்டும் குளிரவைக்கவும்.
* ஜன்னல்களைப் பொறுத்தவரை, நீங்கள் வெட்டிய இடைவெளிகளில் வேகவைத்த இனிப்புகளை க்ரஷ் செய்யவும்.
பேக்கிங்
* 165 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு ஓவனை சூடுபடுத்தவும்
* வீட்டுத் துண்டுகளுக்கு 18 + நிமிடங்களும் சிறிய துண்டுகளுக்கு 12 + நிமிடங்களும் பேக் செய்யவும்.
ஐசிங்
தேவையான பொருட்கள்
ஐசிங் சர்க்கரை - 1500 கிராம்
முட்டையின் வெள்ளை பகுதி - 200 கிராம்
எலுமிச்சை சாறு - 50 கிராம்
செய்முறை
* ஐசிங் சர்க்கரையை சல்லடை செய்து அதனோடு முட்டையின் வெள்ளை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து மிக்சியில் சேர்க்கவும்.
* சுமார் 2 நிமிடங்களுக்குக் குறைந்த வேகத்தில் ஒன்றாக மிக்சியில் அடித்து, பின்னர் பக்கங்களைத் துடைத்து மீண்டும் அடித்துக்கொள்ளவும்.
* தோராயமாகக் குறைந்த வேகத்தில் கலப்பதைத் தொடரவும். கிரீமி கடின நிலைத்தன்மையை அடையும் வரை சுமார் 5 நிமிடங்கள் மிக்சியில் அடித்துக்கொள்ளவும்.
* அலங்கார வேலைகள் செய்வதற்கு சிறிது தண்ணீருடன் ஐசிங்கை தளர்த்தி உபயோகிக்கவும்.
* ஜிஞ்சர் பிரெட் வீட்டைக் கட்டுவதற்குக் கடினமான ஐசிங்கைப் பயன்படுத்துங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"