உங்கள் கை – கால் முட்டிகள் கருப்பாகிறதா? லெஸ் டென்ஷன் மோர் டிப்ஸ்

முட்டிகளில் உள்ள கருமையான தோல் பகுதியை ஆடையால் மறைத்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்? மூட்டுத் தோலானது ஆரோக்கியமானதாகவும், இயல்பான நிறத்திலும் இருக்க சில எளிய வழிமுறைகளை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம். இதை செய்து, முட்டிகளில் உள்ள கருமையை எளிதாக போக்க முடியும். பால், எலுமிச்சை, சர்க்கரை: பால் – 1/4 கப்;…

By: Updated: July 11, 2018, 05:10:48 PM

முட்டிகளில் உள்ள கருமையான தோல் பகுதியை ஆடையால் மறைத்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள்? மூட்டுத் தோலானது ஆரோக்கியமானதாகவும், இயல்பான நிறத்திலும் இருக்க சில எளிய வழிமுறைகளை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம். இதை செய்து, முட்டிகளில் உள்ள கருமையை எளிதாக போக்க முடியும்.

பால், எலுமிச்சை, சர்க்கரை:

lifestyle

பால் – 1/4 கப்; எலுமிச்சை – 2; சர்க்கரை – 2 டீஸ்பூன்

முதலில் கை, கால் முட்டிகளின் மீது பாலை தெளித்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் எலுமிச்சையின் அரை பகுதியை சர்க்கரையில் தொட்டு, முட்டிகளின் மீது நன்கு தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீரில் முட்டிகளை கழுவ வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்துவந்தால், முட்டி தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

மஞ்சள்+பசும்பால்:

மஞ்சள் – 2 டீஸ்பூன்; பசும்பால் – 1/4 கப்

தோலின் மீதுள்ள இறந்த செல்களை உடனடியாக அகற்றும் வல்லமை மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் தூளுடன் பசும்பால் கலந்து, முட்டிப்பகுதியின் மீது தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், லோஷன் அல்லது சோப் பயன்படுத்தி அப்பகுதியை கழுவ வேண்டும். தினந்தோறும் இதை செய்து வந்தாலும் சில நாட்களில் நல்ல மாற்றத்தை காணலாம்.

கற்றாழை:

சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் தோல் கருமை அடைவதை தடுக்கும் சக்தி கற்றாழைக்கு உண்டு. கற்றாழையை வெட்டி வந்து, அதன் தொலை சீவிவிட்டு, உள்ளிருக்கும் ஜெல் போன்ற பசையை முட்டிப்பகுதியில் பூசி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்துவந்தால் ஒரு வாரத்தில் தோல் மிருதுவாகும்.

எலுமிச்சை+தேன்:

எலுமிச்சை – 4; தேன் – 5 டீஸ்பூன்

எலுமிச்சையை அரையரை பழமாக அரிந்து, ஒவ்வொரு பகுதியாக தேனில் தொட்டு முட்டித் தோலின் மீது நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவேண்டும். பின்னர் தண்ணீரால் அப்பகுதியை கழுவ வேண்டும். அதிகளவு தேன் சேர்த்து மசாஜ் செய்தால், கருமை விரைவில் மறையும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Quick and easy way to get rid of dark elbows and knees in a week

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X