ஒரு முறை திடீர் சாதம் செய்து பாருங்க. செமம் சுவையா இருக்கும்
தேவையான பொருட்கள்
அரை ஸ்பூன் சீரகம்
பெருஞ்சீரகம் அரை ஸ்பூன்
2 பூண்டு
1 சின்ன வெங்காயம்
1 ஸ்பூன் தேங்காய் துருவல்
1 ஸ்பூன் சாம்பார் பொடி
1 கப் அவித்த சாதம்
2 ஸ்பூன் எண்ணெய்
அரை ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் கடலை பருப்பு
1 கொத்து கருவேப்பிலை
1 ஸ்பூன் வேர்கடலை
பெருங்காயம்
1 ஸ்பூன் நெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் சீரகம், பெருஞ்சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து இடித்து கொள்ளவும். சாதத்தில் எண்ணெய் சேர்த்து, சாம்பார் பொடி சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, கடலை பருப்பு, கருவேப்பிலை, வேர்கடலை சேர்த்து பொறியவிடவும். தொடர்ந்து இதில் காயத்தை சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து இடித்த பொருட்களை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் சாதத்தை சேர்த்து கிளரவும்.