/indian-express-tamil/media/media_files/qTD2eVuxzYmzpxTPuSEs.jpg)
Radhika Sarathkumar
நடிகை ராதிகா மகள் ரேயன். இவர் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ரேயன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர், அதில் அடிக்கடி தன்னுடைய குழந்தை பருவ போட்டோஸ், குடும்பத்தினருடன் இருக்கும் நிறைய படங்களை பகிர்ந்து கொள்வார்.
இவரது கணவர் அபினவ் ஒரு கிரிக்கெட் வீரர். இந்த தம்பதிக்கு தாரக் என்கிற மகனும், ராத்யா என்ற மகளும் உள்ளனர். ராதிகா அடிக்கடி தன் பேரக் குழந்தைகளை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ராத்யா படிக்கும் பள்ளியில் தாத்தா, பாட்டி கதை சொல்லும் ஆக்டிவிட்டி நடந்தது. இதில் ராதிகாவும், சரத்குமாரும் கலந்து கொண்டு, அங்கு படிக்கும் குழந்தைகளிடம் கதை சொல்லி மகிழ்ந்தனர்.
’அவர்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி, அவள் வகுப்பிற்கு ஒரு கதையைப் படிக்க வர நேரம் ஒதுக்கினார்கள்.. அதனால்தான் அவர்கள் சிறந்த தாத்தா, பாட்டி’ என்று உணர்ச்சிப் பொங்க இந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ரேயன்.
வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தனது, சமத்துவ மக்கள் கட்சியை பாஜவுடன் இணைப்பதாக சரத்குமார் அறிவித்தார்.
கட்சியை இணைத்ததுடன் பாஜகவில் அவர் ஐக்கியமாகினார்.
தொடர்ந்து சமீபத்தில், கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராதிகா மற்றும் சரத்குமார் மேடையிலேயே பிரதமர் மோடியை சந்தித்தனர்.
இப்படி தேர்தல் பணிகளில் பிஸியாக இருக்கும் ராதிகாவும், சரத்குமாரும் பேத்தி பள்ளியில் நடந்த கதை சொல்லும் நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.