சத்தான ராகி சேமியா இட்லி: ரொம்ப ஈசியா செய்யலாம்

ராகி சேமியா, சாதாரணமாக நாம் கடைகளில் வாங்கும் ஒரு பொருள்தான். அதைப் பயன்படுத்தி சத்தான சுவையான இட்லி எப்படி தயார் செய்வது என இங்கு பார்க்கலாம்.

ராகி சேமியா, சாதாரணமாக நாம் கடைகளில் வாங்கும் ஒரு பொருள்தான். அதைப் பயன்படுத்தி சத்தான சுவையான இட்லி எப்படி தயார் செய்வது என இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
ராகி சேமியா இட்லி

ராகி சேமியா இட்லி

ராகி சேமியா, சாதாரணமாக நாம் கடைகளில் வாங்கும் ஒரு பொருள்தான். அதைப் பயன்படுத்தி சத்தான சுவையான இட்லி எப்படி தயார் செய்வது என இங்கு பார்க்கலாம்.

Advertisment

ராகி சேமியா இட்லி தயாரிக்கத் தேவையான பொருட்கள்

 ராகி சேமியா - 200 கிராம், நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி, பட்டாணி அனைத்தும் சேர்த்து - 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 4, புதினா,கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன், நறுக்கிய இஞ்சி - 1 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு - 1/4 கப், நெய் - 2 டீ ஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிது, மாங்காய் பொடி - 1 டீ ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

 ராகி சேமியா இட்லி எப்படிச் செய்வது?

Advertisment
Advertisements

முதலில் உளுந்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு காய்கறிகளை வதக்கி, புதினா, கொத்தமல்லி, உப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், ராகி சேமியா கலந்து இறக்கவும். இத்துடன் அரைத்த உளுந்தம் பருப்பு கலவை, மாங்காய் பொடி, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். பிறகு இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்தால், ராகி சேமியா இட்லி தயார்.ராகி உணவு சத்தானது, ருசியானதும்கூட. எனவே ராகி சேமியா இட்லி சமைத்து வித்தியாச உணர்வைப் பெறுங்கள். இது சர்க்கரை நோயாளிகளுக்குm, உடல் எடை குறைப்புக்கும் உகந்ததும்கூட. 

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: