பாலை வைத்து செய்யும் இந்த ரப்டி ஸ்வீட் செம்ம சுவையாக இருக்கும்
தேவையான பொருட்கள்
2 ½ கப் பால்
2 ஸ்பூன் பாதாம் நறுக்கியது
2 ஸ்பூன் பிஸ்தா நறுக்கியது
½ ஸ்பூன் ஏலக்காய் பொடி
அரை கப் சர்க்கரை
செய்முறை : ஒரு பாத்திரத்தில் பாலை நாம் கொதிக்க வைக்க வேண்டும். முதல் 12 நிமிடங்கள் கழித்து அதன் ஆடையை தனியாக பாத்திரங்களின் ஓரங்களில் சேர்க்கவும். இதுபோல அடுத்த 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தொடர்ந்து இதில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து பாதாமை சேர்க்கவும். தொடர்ந்து பிஸ்தாவை சேர்க்கவும். மீண்டும் கொதிக்க வைத்து, அதன் ஆடையை சேகரித்து, எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொடுக்கவும். தொடர்ந்து ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.