விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரில் நடித்தார். சரவணன் மீனாட்சி தொடரின் 2ஆம் பாகத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். பிறகு, விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்து வந்தார். . அந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisment
தொடர்ந்து கலர்ஸ் தமிழின் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்தார். ஆனால் இந்த சீரியல் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி’ முன்பு ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது தனது முடி பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
இதோ அழகான ஆரோக்கியமான முடிக்கு ரச்சிதா மகாலட்சுமி பகிரும் குறிப்புகள்!
வீடியோவில் முடி பராமரிப்பு குறித்து பேசிய ரச்சிதா, இந்த துறையில இருக்கிற வரைக்கும் முடியை பராமரிக்கிறது ரொம்ப கஷ்டம். நம்ம பயன்படுத்தற ஹீட்டுக்கே’ பாதி முடி போயிடும். அதுவும் எனக்கு உச்சந்தலையில் முடி சுத்தமாக போய்விட்டது. முடி நீளமாக வேண்டும் என்பதுக்காக எக்ஸ்டன்ஷன் வச்சேன். அதனால் எனக்கு’ முடி அனைத்தும் கொட்டிவிட்டது. என் அம்மா செம்பருத்தி, கறிவேப்பிலை, வெந்தயம் எல்லாம் போட்டு காய்ச்சி வீட்டுல எண்ணெய் பண்ணுவாங்க. அதை பயன்படுத்திய பிறகுதான், எனக்கு பிரச்சனை சரியானது.
எப்போவுமே எண்ணெய் தேய்ச்சி குளிக்கக் கூடாது.. எப்போவாவது தான்’ எண்ணெய் தேய்ச்சு குளிக்கனும் நிறைய பேரு சொன்னாங்க.. அதையும் டிரை பண்ணேன். வாரத்துல ஒரு நாள் எண்ணெய் வச்சு தேய்ச்சு குளிக்க ஆரம்பிச்சேன். ரிசல்ட் சூப்பரா இருந்தது. பெங்களூர், ஹைதரபாத், சென்னை, என எப்போவுமே டிராவல்ல தான் இருப்பேன். அதனால தண்ணீர் மாறிட்டே இருக்கும். ஆனாலும் இந்த எண்ணெய் பயன்படுத்துறதால’ முடி கொட்டுறது குறைஞ்சிருக்கு..
நான் என்னோட முடி பராமரிப்புக்கு எஸ்பி தயாரிப்புகள் தான் பயன்படுத்துறேன். சீரம் மட்டும் லோரியல் யூஸ் பண்றேன். மேலும் முடிக்கு கற்றாழை ஜெல் பயன்படுத்துவேன். எப்போதாவது முட்டை வெள்ளைக்கருவையும் போடுவேன். ஊறவைத்த பச்சை பயறு, வெந்தயம் இரண்டையும் அரைத்து, அந்த பேஸ்டை கூந்தலில் தடவினால்’ முடி நல்ல அடர்த்தியாகும்.
வழக்கமாக ஹீட் புரொடெக்ஷன் போட்டுத்தான் நான் ஸ்ட்ரெயிட்னிங் பண்ணுவேன். கண்டிப்பா கண்டீஷனர் போடுவேன். இவ்வாறு ரச்சிதா மகாலெட்சுமி ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.. இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“