rachitha mahalakshmi instagram vijay tv rachitha : இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் என்று தான் சொல்ல வேண்டும். பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ என்கிற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா.
இந்த சீரியல் கடந்த சுமார் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் ஹீரோவாக பலர் நடித்தாலும், ஹீரோயினாக ரச்சிதாவே தொடர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் யப்பா சாமி எப்போதான் இந்த சீரியல் முடியும் என்று ரசிகர்கல கடுப்பாகும் அளவுக்கு சென்றது இந்த சீரியல்.
இந்த சீரியலுக்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகை ரச்சிதா தமிழ் சீரியல் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
மேலும், இவர் ‘உப்புக்கருவாடு’ தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவருக்ககு என தனி ரசிகர் வட்டம் உள்ளது. இந்நிலையில் நடிகை ரச்சிதா அடுத்த சீரியலில் எப்போது நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 2 பாகத்தில் ரச்சிதா ஹீரோயின் ரோலில் நடிப்பது உறுதியானது.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/5-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/10/5-3-819x1024.jpg)
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரச்சிதா, படிப்போடு சேர்த்து மறுபுறம் மாடலிங்கும் செய்துக் கொண்டிருந்தார். கன்னட சேனலான ஸ்டார் சுவர்ணாவில் ஒளிபரப்பான, ’மேக மந்தரன்’ என்ற சீரியல் தான் அவருக்கு முதல் தொடர். தொடர்ந்து 5 கன்னட சீரியல், 2 தெலுங்கு சீரியல்களில் நடித்து விட்டு, 2011-ல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/5-4-1024x1024.jpg)
அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த, ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ரச்சிதாவின் நடிப்பை போலவே அவரின் உடை அலங்காரம், புடவை கலெக்ஷனுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ரச்சிதாவுக்கு புடவை என்றால் கொள்ளை பிரியமாம். அவரிடம் இருக்கும் புடவைகளை வைத்து ஒரு ஜவுளி கடையே திறக்கலாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil