முகம் பூரா பிம்பிள்ஸ் இருக்கும்… எனக்கு டாக்டர் சொன்ன சிம்பிள் அட்வைஸ் இதுதான்; நடிகை ரச்சிதா

எவ்வளோ ட்ரீட்மென்ட்ஸ், க்ரீம்ஸ், ஃபேஸ் வாஷ்னு என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன். ஆசிட் வாஷ் எல்லாம் கூட பண்ணேன். எதுவுமே செட்டாகல. அதுக்கப்புறம் ஒரு டாக்டர், உங்க சாப்பிடுற பழக்கத்தையும் தூங்குற பழக்கத்தையும் மாத்துங்கனு சொன்னாங்க.

எவ்வளோ ட்ரீட்மென்ட்ஸ், க்ரீம்ஸ், ஃபேஸ் வாஷ்னு என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன். ஆசிட் வாஷ் எல்லாம் கூட பண்ணேன். எதுவுமே செட்டாகல. அதுக்கப்புறம் ஒரு டாக்டர், உங்க சாப்பிடுற பழக்கத்தையும் தூங்குற பழக்கத்தையும் மாத்துங்கனு சொன்னாங்க.

author-image
WebDesk
New Update
Rachitha Mahalakshmi

Rachitha Mahalakshmi

சின்னத்திரையில் தனது வசீகரமான நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றவர் ரச்சிதா மகாலட்சுமி. "சரவணன் மீனாட்சி" தொடரின் ‘தங்க மீனாட்சி’யாக தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரிச்சயமானவர். அதன் பிறகு, "நாம் இருவர் நமக்கு இருவர்", "நாச்சியார்புரம்", "சொல்ல மறந்த கதை" என பல்வேறு தொடர்களில் நடித்து, சின்னத்திரை ரசிகர்களை கட்டிப் போட்டார்.  பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டதன் மூலம், ரச்சிதா தனது நடிப்பையும் தாண்டி, தனிப்பட்ட குணங்களையும் வெளிப்படுத்தினார்.

சீரியல்களில் உச்சம் தொட்ட ரச்சிதா, சினிமாவில் தனது இடத்தைப் பிடிக்கவும் முயற்சி செய்தார். "உப்பு கருவாடு" என்ற படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில், அவர் நடித்த "ஃபயர்" திரைப்படம், அவரது நடிப்புத் திறனுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்தது. இந்தப் படத்தில், கவர்ச்சியான தோற்றத்தில் நடித்த ரச்சிதாவின் முயற்சி, விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.

Advertisment

ரச்சிதா மகாலட்சுமியின் வசீகரமான அழகு, அவருடைய ரசிகர்களை எப்போதும் கவர்கிறது. ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை அவரது சருமப் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்வதிலும் அவர் கவனம் செலுத்துகிறார்.

Advertisment
Advertisements

”எனக்கு முகம் முழுக்க ரொம்ப பிம்பிள்ஸ் இருக்கும். அது இப்போ கம்மியா இருக்கறதே, எங்க வீட்ல உள்ளவங்க, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஷாக் ஆகிதான் பார்ப்பாங்க. ஏன்னா, அவ்வளோ பிம்பிள்ஸ் எனக்கு. அதுகூட ஏன் வந்துச்சுன்னு எனக்கு அப்போ தெரியல. அப்புறம் தான் தெரிஞ்சது, அது ஹார்மோன் இம்பேலன்ஸ் இல்லனா ஸ்ட்ரெஸ்ஸால வந்ததுன்னு.

எவ்வளோ ட்ரீட்மென்ட்ஸ், க்ரீம்ஸ், ஃபேஸ் வாஷ்னு என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன். ஆசிட் வாஷ் எல்லாம் கூட பண்ணேன். எதுவுமே செட்டாகல. அதுக்கப்புறம் ஒரு டாக்டர், உங்க சாப்பிடுற பழக்கத்தையும் தூங்குற பழக்கத்தையும் மாத்துங்கனு சொன்னாங்க. அதை மாத்தின உடனே, கிட்டத்தட்ட 6-8 மாசத்துல, கொஞ்சம் எக்ஸர்சைஸும் பண்ணேன். ரொம்ப ஹார்ட்கோர் எக்சசைஸ் எல்லாம் இல்ல. யோகா, லைட் ஸ்ட்ரெச்சிங், வாக்கிங் மாதிரி பண்ணேன். கூடவே என்னோட உணவுப் பழக்கத்தை மாத்தினேன். அவ்வளவு தான், அப்படியே மாறிடுச்சு”, என்று ரச்சிதா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: