முள்ளங்கி வைத்து, இப்படி சட்னி செய்யவும். இது மிகவும் சுவையான ரெசிபி.
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
4 வத்தல்
கட்டி பெருங்காயம் சின்ன துண்டு
சின்ன வெங்காயம் 10
பூண்டு 6
முள்ளங்கி 2 நறுக்கியது
1 தக்காளி
உப்பு தேவையான அளவு
சின்ன அளவு புளி
கால் கப் துருவிய தேங்காய்
தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, வத்தல் 3
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வத்தல் சேர்த்து வதக்கவும். நிறம் மாறியதும், அதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து அதே எண்ணெய்யில் கட்டி பெருங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதையும் எடுத்து கொள்ளவும். தொடர்ந்து இன்னும் எண்ணெய் சேர்த்து கொள்ளவும், இதில் சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து முள்ளங்கி சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கியதும், அதில் தக்காளி சேர்த்து வதக்கவும், புளி சேர்த்து கொள்ளவும். இவை நன்றாக வதங்கியதும், ஆறவைக்கவும். தற்போது வதங்கிய அனைத்தையும் அரைத்துகொள்ளவும். கடைசியாக எண்ணெய், கடுகு, வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“