திருமணம்.. 2 குழந்தைக்கு அம்மா… நம்ப முடியாத வெயிட் லாஸ்! ஆச்சரியப்பட வைக்கும் ராதிகா மகள் ரேயான்

தனது அம்மாவுடன் சிறகுகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அவ்வளவு தான் அதன் பின்பு ரேயானை சினிமாவில் பார்க்கமுடியவில்லை.

By: Updated: July 29, 2020, 02:10:48 PM

radhika daughter rayane radhika daughter baby : தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்றான ராதிகா – சரத்குமாரின் குடும்பத்தில் இருந்து பலரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள். நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அரசியலில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடித்துவருகிறார்.

ராதிகா சரத்குமார் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், நடிகை ஆவார். அவர் சித்தி, செல்வி மற்றும் அரசி போன்ற பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்த ராடான் மீடியா ஒர்க்ஸ் இன் நிறுவனர் . பெண்களுக்கு அருமையான முன்மாதிரியாக இருக்கிறார். மறைந்த தமிழ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான எம் ஆர் ராதாவின் மகள். குடும்பமே ஒரு கலைக் குடும்பம். இப்படி ராதிகா- சரத் பற்றி பல தகவல்கள் உள்ளன.

அதே நேரம், ராதிகாவின் மூத்தமகள் ரேயான் பற்றி கட்டாயம் கூற வேண்டும். குடும்பமே சினிமாவில் ஆர்வம் காட்டினாலும் ரேயான் கேமராவில் முகம் காட்டுவதை தொடர்ந்து தவிர்த்தார். தனது அம்மாவுடன் சிறகுகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அவ்வளவு தான் அதன் பின்பு ரேயானை சினிமாவில் பார்க்கமுடியவில்லை. வெளிநாடுகளுக்கு சென்று தனது படிப்பை தொடர்ந்தார். இந்நிலையில், ரேயான்க்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

ரேயான் மற்றும் அபிமன்யு மிதுன் தம்பதியருக்கு ஏற்கனவே ஆண் குழந்தை இருந்த நிலையில் சமீபத்தில் தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது.ரேயான் அப்பா சரத் குமார் மீதும் அம்மா ராதிகா மீதும் அதீத அன்பும் பாசமும் வைத்துள்ளார். ட்விட்டரில் யாரேனும் வீண் விமர்சனங்களை பதிவிட்டாலும் தகுந்த பதிலடி கொடுப்பார்.

 

View this post on Instagram

 

Spoiler Alert: There is no chill EVER.

A post shared by Rayane Mithun (@rayanemithun) on

அம்மாவை போலவே மிகவும் தைரியமானவர். 2 ஆவது குழந்தைக்கு பிறகு படு ஸ்லிம்மாக தனது உடலை ஆரோக்கியமாக பேணி காத்து வருகிறார்.சிறந்த மனைவியாகவும், தாயாகவும், மகளாகவும் ரேயான் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறார்.

சூப்பர் சிங்கர் திவாகருக்கு புரமோஷன்… நெகிழ்ச்சியான தருணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Radhika daughter rayane radhika daughter baby rayane son rayanne hardy instagram

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X