சுவையான ராகி சாக்லேட் கேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு- 1 கப்
கோ கோ பவுடர்- அரை கப்
முட்டை- 2
நாட்டு சர்க்கரை- 1 கப்
பேக்கிங் சோடா- 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர்- கால் டீஸ்பூன்
ஆயில்- 1 ஸ்பூன்
வெனிலா எசன்ஸ்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி கலக்கி அதில் ஆயில், கோ கோ பவுடர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும். இப்போது இதை மிக்ஸி ஜாரில் போட்டு அடிக்கவும். அடுத்து அதே மிக்ஸி ஜாரில் சலித்து வைத்துள்ள ராகி மாவு, நாட்டு சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர், தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து மீண்டும் அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த கலவையை வெண்ணெய் தடவிய ஒரு கேக் மோல்டில் ஊற்றி ஓவன் அல்லது குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான, சத்தான ராகி சாக்லேட் கேக் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“