சிறுதானிய உணவுகளில் அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. அரிசியை விட இதில் சத்துக்கள் உள்ளன.
சிறுதானிய உணவுகளில் புரதச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. குறிப்பாக ராகியில் புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. இந்த சத்து நிறைந்த ராகியில் முறுக்கு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
கடலை மாவு- கால் கப்
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்
எள்- 1 ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மாவு வகைகளை சேர்த்து உப்பு, பெருங்காயத் தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து சிறிது எண்ணெய்யை காய்ச்சி இதில் ஊற்றவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசைய வேண்டும்.
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெய்யில் முறுக்கு பிழியவும். பொன்னிறமாக சுட்டு எடுத்தால் அவ்வளவு தான் சுவையான ராகி முறுக்கு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“