கேரள ஸ்பெஷல் இனிப்பான பழம் பொரியை ராகி மாவு கொண்டு செய்வது குறித்து பார்ப்போம்.
ராகிமாவு- 1 கப்
அரிசிமாவு- 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை- 1 டீஸ்பூன்
கனிந்த நேந்திரம் பழம்- 2
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, சிறிதளவு மஞ்சள்தூள், நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜிமாவு பதத்துக்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து நேந்திரம் பழத்தை தோல் எடுத்து நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பழத்தை ஒவ்வொன்றாக மாவில் டிப் செய்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவை, ஹெல்தியான ராகி மாவு பழம் பொரி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“