New Update
00:00
/ 00:00
சுவை, ஆரோக்கியமான ராகி பர்பி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு – 1 கப்
ரவை – ¼ கப்
வெல்லம் – 1 கப்
நெய் – தேவையான அளவு
முந்திரி – தேவையான அளவு
ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை
அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரம் வைக்கவும். அதில் சிறிதளவு நெய் சேர்த்து 1 கப் ராகி மாவு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் ரவை சேர்த்து வறுக்கவும். மற்றொரு பாத்திரம் எடுத்து 1 கப் வெல்லத்தை சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டிய வெல்ல கரைசலை ராகி, ரவை வறுத்து வைத்ததில் சேர்த்து கலக்கவும். ஏலக்காய் தூள் சேர்த்து கட்டி விழுகாமல் குறைவான தீயில் நன்கு கலக்கி இறக்கவும். அதை தட்டில் கொட்டி சிறிது நேரம் ஆறவிட்டு சதுர வடிவில் நறுக்கி கொள்ளவும். இறுதியாக முந்திரி சேர்த்து பரிமாறலாம், அவ்வளவு தான் ராகி பர்பி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.