சுவை, ஆரோக்கியம் நிறைந்த ராகி சப்பாத்தி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு – 1 கப்
தண்ணீர் – முக்கால் கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து முக்கால் கப் தண்ணீர் விட்டு அதனுடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்து வரும் போது, ராகி மாவை சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும். இப்போது மாவு சூடு ஆறியதும் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். ராகி மாவு தனியாக எடுத்து வைத்து அதில் இந்த சப்பாத்தி மாவை புரட்டி எடுக்கவும். சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக சப்பாத்தி திரட்டவும்.
அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ராகி சப்பாத்தி போட்டு எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவை, ஆரோக்கியமான ராகி சப்பாத்தி ரெடி. தேங்காய் சட்னி, தக்காளி குழம்புடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“