புசுபுசுன்னு ராகி சப்பாத்தி: இதை ஃபாலோ பண்ணுங்க!

நாம் சுவையான ராகி சப்பாத்தி மற்றும் தக்காளி குருமா எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.

நாம் சுவையான ராகி சப்பாத்தி மற்றும் தக்காளி குருமா எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
New Update
சப்பாத்தி

சப்பாத்தி

நாம் சுவையான ராகி சப்பாத்தி மற்றும் தக்காளி குருமா எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.

தக்காளி குருமா

தேவையான பொருட்கள்

5 தக்காளி

2 வெங்காயம்

2 பச்சைமிளகாய்

1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1 பிரிஞ்சி இலை

1 பட்டை

கால் ஸ்பூன் மஞ்சள் தூள்

1 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்

அரை ஸ்பூன் கரம் மசாலா

4 ஸ்பூன் தேங்காய் துருவல்

1 ஸ்பூன் சோம்பு

1 ஸ்பூன் பொட்டுக்கடலை

தேவையான அளவு உப்பு

Advertisment

செய்முறை : ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பிரிஞ்சி இலை, 2 பட்டை, 2 ஸ்பூன் சோம்பு, வெங்காயம் சேர்க்கவும், தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் வந்தங்கியதும், ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். தொடர்ந்து நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். தொடர்ந்து உப்பு சேர்க்கவும். தொடர்ந்து சில தக்காளி துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த தக்காளி விழுதையும் இதில் சேர்க்கவும். தொடர்ந்து அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா சேர்க்கவும். தொடர்ந்து மிக்ஸியில் தக்காளி சாறு கழுவிய தண்ணீரை இதில் சேர்க்கவும். தொடர்ந்து மூடி போட்டு மூடவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், சோம்பு, பொட்டுக்கடலை சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த தேங்காய்யை சேர்க்கவும். தொடர்ந்து கொதிக்கவிடவும். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.

ராகிசப்பாத்தி

தேவையான பொருட்கள்

மூக்கால் கிளாஸ் தண்ணீர்

அரை ஸ்பூன் உப்பு

ஒரு ஸ்பூன் எண்ணெய்

200 கிராம் கேழ்வரகு மாவு

செய்முறை : அடுப்பை ஆன் செய்து அதில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றவும், உப்பு சேர்த்து கொள்ளவும், கேழ்வரகு மாவை சேர்த்துகொள்ளவும். எண்ணெய் சேர்க்கவும். தொடர்ந்து இதை கலந்து விட வேண்டும். கலந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு காத்திருக்கவும். தொடர்ந்து சூடு ஆறியதும், சப்பாத்தி மாவு போல் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து உருண்டைகளாக்கி, அதை கேழ்வரகு மாவுடன் வைத்து சப்பாத்தி போடவும். தொடர்ந்து வழக்கம் போல் சப்பாத்தி சுடவும். இது வழக்கம்போல் மிரதுவாக வரும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: