ஒரு முறை ராகி தோசை இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 டேபிள்ஸ்பூன் ராகி
1 டேபிள்ஸ்பூன் உளுந்து, குறைந்தது 2 மணி நேரம் ஊறவைக்கவும்
பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, குடமிளகாய், கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாய்
உப்பு சுவைக்கேற்ப
செய்முறை
உளுந்தை நன்கு கழுவி, அரைத்து சிறிது தண்ணீர் சேர்க்கவும். இந்த மாவுடன் ராகி மாவு சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இதை குறைந்த பட்சம் 7-8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.காலையில் மாவில் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தவாவை சூடாக்கி அதன் மீது மாவை ஊற்றவும். நறுக்கிய காய்கறிகளைப் போட்டு இருபுறமும் வேக வைக்கவும். கொத்தமல்லி மற்றும் புதினா சட்னியுடன் பரிமாறவும்.