Ragi dosa recipe, ragi dosa in tamil : ராகி தோசை எல்லாருக்கும் தான் செய்யத் தெரிந்திருக்கும் ஆனால் மேலும், மேலும் சாப்பிடத் தூண்டும் வகையில் சுவையாக செய்தால் கண்டிப்பாக காலி ஆகிவிடும்.
Advertisment
காலையில் எழுந்ததும் மிகவும் ஈஸியாக செய்யுமாறு என்ன ரெசிபி உள்ளது என்று யோசிக்கிறீர்களா? அதிலும் ஆரோக்கியமான ரெசிபி என்ன உள்ளது என்று சிந்திக்கிறீர்களா? அப்படியானால் ராகி தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி செய்வதற்கு 10 நிமிடம் போதும். மேலும் பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை காலை வேளையில் செய்து சாப்பிடலாம்.
அந்த அளவில் மிகவும் ஈஸியான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி. சரி, இப்போது அந்த ராகி தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா
பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ளவும். ராகி மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தோசை மாவுடன் கலந்து தோசைக்கல்லை காயவைத்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கும்போது, தோசையின் நடுவில் வதக்கிய வெங்காயத்தை வைத்து, சுட்டு எடுக்கவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”