Ragi laddu tamil ragi laddu recipe tamil : கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Advertisment
குழந்தைகளின் சத்தான ஸ்னாக்ஸ். கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும்.வளரும் குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற லட்டு இது. பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் இது கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். வாங்க செய்யலாம்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு ஒரு கப் கேழ்வரகு மாவை மிதமான தீயில் மணம் வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.வெல்லத்தை அரைக் கப் தண்ணீர் விட்டு, சிறு கம்பிப் பதம் வரும்வரை காய்ச்சவும்.
வறுத்த மாவில் ஏலக்காய்ப் பொடி, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்.
காய்ச்சிய வெல்லப்பாகை கைபொறுக்கும் பதத்தில் மாவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.சுவையான சத்தான கேழ்வரகு லட்டு தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil