ராகி சேமியா இட்லி ஒரு முறை இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்: ராகி சேமியா - 200 கிராம், நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி, பட்டாணி அனைத்தும் சேர்த்து - 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 4, புதினா,
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன், நறுக்கிய இஞ்சி - 1 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு - 1/4 கப், நெய் - 2 டீ ஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிது, மாங்காய் பொடி - 1 டீ ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
ராகி சேமியா இட்லி எப்படிச் செய்வது?
முதலில் உளுந்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு காய்கறிகளை வதக்கி, புதினா, கொத்தமல்லி, உப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், ராகி சேமியா கலந்து இறக்கவும்.
இத்துடன் அரைத்த உளுந்தம் பருப்பு கலவை, மாங்காய் பொடி, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். பிறகு இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்தால், ராகி சேமியா இட்லி தயார்.
ராகி உணவு சத்தானது, ருசியானதும்கூட. எனவே ராகி சேமியா இட்லி சமைத்து வித்தியாச உணர்வைப் பெறுங்கள். இது சர்க்கரை நோயாளிகளுக்குm, உடல் எடை குறைப்புக்கும் உகந்ததும்கூட!