சொன்னா நம்புங்க சரத் - ராதிகா செல்ல பையன் வளர்ந்துட்டாரு... பாப் சிங்கர் வேற!

மகன் ராகுலுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் படிக்க உதவியும் செய்து வருகிறார் ராதிகா

மகன் ராகுலுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் படிக்க உதவியும் செய்து வருகிறார் ராதிகா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சொன்னா நம்புங்க சரத் - ராதிகா செல்ல பையன் வளர்ந்துட்டாரு... பாப் சிங்கர் வேற!

rahul sarathkumar radhika son rahul : சரத்குமார் - ராதிகா தம்பதிகளின் செல்ல பையன் ராகுல் வளர்ந்துட்டாரு. 16 வயதாகும் ராகுல் பாப் சிங்கர் வேற. நம்ப முடியுதா? மிகப் பெரிய கலைக்குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் ராகுல் இசை மீது ஆர்வம் காட்டி வருவது ஆச்சரியமான விஷயம் தான்.

Advertisment

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அரசியலில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடித்துவருகிறார்.ராதிகா சரத்குமார் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், நடிகை ஆவார். அவர் சித்தி, செல்வி மற்றும் அரசி போன்ற பல வெற்றிகரமான சீரியல்களை தயாரித்த ராடான் மீடியா ஒர்க்ஸ் இன் நிறுவனர் . பெண்களுக்கு அருமையான முன்மாதிரியாக இருக்கிறார். மறைந்த தமிழ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான எம் ஆர் ராதாவின் மகள். குடும்பமே ஒரு கலைக் குடும்பம்.

publive-image

அதே போல, சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமா உலகில் முக்கிய இளம் நடிகையாக நடித்து வருகிறார். வரலட்சுமி மிக விரைவாக இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இப்படி, சரத்குமாரின் குடும்பத்தில் அவர், அவருடைய மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி என மூன்று பேர் சினிமா கலைத்துறையில் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில், சரத்- ராதிகா தம்பதியினரின் மகன் ராகுல் சரத்குமார் குறித்த தேடல்கள் இணையத்தில் அதிகரித்துள்ளன. ராகுல் சன் டேக் ஆஃப் மூலம் ராப் இசை கலைஞராக அறிமுகமாகினார். இந்த மியூஸிக் வீடியோவுக்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இந்த சிங்கிள் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து ராகுல் அடுத்தடுத்த ராப் பாடலுக்கு தன்னை மெருக்கேற்றிக் கொண்டு வருகிறார்.

Advertisment
Advertisements

publive-image

தொலைக்காட்சி தொடர்கள், படங்கள் என்று பிசியாக இருந்த ராதிகா சரத்குமாருக்கு இந்த லாக்டவுனால் கொஞ்சம் ஓய்வு கிடைத்துள்ளது. வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளை செய்வதுடன், மகன் ராகுலுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் படிக்க உதவியும் செய்து வருகிறார் ராதிகா. என்ன தான் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்கள் பக்கம் கண்டிப்பாக வருவார் அவர். மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன், அவர்களை வாழ்த்தியும் ட்வீட் போடுவார்.வரலட்சுமி, ராதிகா, மற்றும் சரத்குமார் ஆகியோர் இணைந்து 'பிறந்தால் பராசக்தி' என்கிற படத்தில் நடித்து வருகின்றனர்.

சரத்குமார், ராதிகாவுடன் நடித்த வானம் கொட்டட்டும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, ராதிகா மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: