Railway News In Tamil: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய ரயில்வே பயணிகள் ரயில்களின் வேகத்தை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது. தேசிய போக்குவரத்து துறை கூறுகையில், இந்திய ரயில்வேயில் அகல ரயில் பாதை வழித் தடங்கள் மொத்தம் 63,500 கி.மீ.க்கு மேல் உள்ளது. இதில் 10,000 கி.மீ வரை இந்த நிதி ஆண்டுக்குள் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ வரை அதிகரிக்க இலக்காக வைக்கப்பட்டுள்ளது. கோல்டன் நாற்கரத்தின் 9,893 கி.மீ பாதையிலும் கோல்டன் முக்கோண (ஜி.க்யூ / ஜி.டி) பாதைகளில் ரயில்களின் வேகம் 130 கி.மீ வேகத்திற்கு மேம்படுத்தப்பட உள்ளது.
இதுவரை 1,442 கி.மீ. தூரம் ரயில் தடங்கள் வரை பயணிகள் ரயில்களின் வேகம் மணிக்கு 130 கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு, பயணிகள் ரயில்கள் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்ல, நாற்புற, கோல்டன் டயக்னோல் ரயில் பாதைகளில் 15 சதவீதம் ஏற்கனவே மேம்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆர்.டி.எஸ்.ஓ 130 கி.மீ வேகத்தில் சென்னை-மும்பை வழித்தடத்தில் பரிசோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
Railway news in tamil
Indian railways passenger trains Speed upgradation- இந்திய ரயில்வே பயணிகள் ரயில் வேகம் அதிகரிக்க திட்டம்
இந்த மாத தொடக்கத்தில், ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ், இந்த நிதியாண்டின் முடிவில், 6 முக்கிய ரயில் பாதைகளும் ஒரு மணி நேரத்திற்கு 130 கி.மீ வேகத்தில் பயணிகள் ரயில் செல்லும் வகையில் மேம்படுத்தப்படும் என்று கூறினார். தேசிய போக்குவரத்து பயணிகள் ரயில் போக்குவரத்தில் கோல்டன் நாற்கரம் பாதை மற்றும் கோல்டன் முக்கோண வழித்தடம் பெரும் பங்கைக் கொண்டுள்ளன. டெல்லி முதல் மும்பை வழித்தடம், டெல்லி முதல் சென்னை வழித்தடம், மும்பை முதல் சென்னை வழித்தடம், டெல்லி முதல் ஹவுரா பாதை, மும்பை முதல் ஹவுரா பாதை மற்றும் ஹவுரா முதல் சென்னை பாதை வரை ரயில்வேயின் கோல்டன் நாற்கர மற்றும் முக்கோண பாதைகள் உள்ளன.
பயணிகள் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்ல, தேசிய போக்குவரத்து ஆணையம் டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா வழித்தடங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது 13,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு திட்டமாகும். இந்த இரண்டு திட்டங்களும் 2023ம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும். இந்த வழித்தடங்களை மேம்படுத்துவதன் மூலம், டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா இடையேயான பயண நேரம் வெறும் 12 மணி நேரமாகக் குறையும்.
டெல்லி-மும்பை ரயில் பாதை மற்றும் வதோதரா மற்றும் அகமதாபாத் இடையேயான ரயில்பாதை ஆகியவற்றை மேம்படுத்த சுமார் ரூ.6,806 கோடி முதலீடு தேவைப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கான்பூர்-லக்னோ நீட்சி உட்பட டெல்லி-ஹவுரா ரயில் பாதையை மேம்படுத்த ரூ.6,685 கோடி முதலீடு தேவைப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"