பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ரைசா வில்சன், சமீபத்தில் காஷ்மீருக்கு சென்றார். அங்கு குல்மார்க், ஸ்ரீநகர் படகு சவாரி என பல இடங்களில் சுற்றிப் பார்த்தபோது எடுத்த படங்களை ரைசா தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
பனி படர்ந்த மலைகள், பச்சை புல்வெளிகள், அழகான ஏரிகள் மற்றும் வசீகரிக்கும் நீர்வீழ்ச்சிகள் என அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் பகுதி காஷ்மீர்.
ஸ்ரீநகர் படகுசவாரி
காஷ்மீரில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான ஸ்ரீநகர், அதன் உயிரோட்டத்திற்கு பெயர் பெற்றது. தால் ஏரியில் ஷிகாரா சவாரி செய்வது முழு குடும்பத்திற்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். நீரின் மீது சமையலறை மற்றும் பிற வசதிகளுடன் கூடிய படகு இல்லத்தை வாடகைக்கு எடுக்கலாம்.
காஷ்மீரில் செய்யப்படும் உணவு வகைகள், கலைப்படைப்புகள் மற்றும் கலைப்பொருட்கள் அனைத்தும் இப்பகுதிக்கு வருபவர்களுக்கு சிறந்த அனுபவமாக உள்ளது.
குல்மார்க்
கடல் மட்டத்திலிருந்து, 2,730 மீட்டர் உயரத்தில் உள்ளது குல்மார்க். இங்கு, உலகின் மிக உயரமான, கேபிள் கார் மூலம் சுற்றி பார்க்கலாம். குல்மார்க் மற்றும் அதன் அருகில் உள்ள கிளன்மார்க் ஆகியவை, கடும் பனிக் காலத்தில், பனிச்சறுக்கு விளையாடி மகிழ, பிரசித்த பெற்ற இடங்களாகும்.
காஷ்மீரின் ஏரிகளும், புல்வெளிகளும், பனி மூடிய சிகரங்களும், அழகிய சுற்றுலாத் தலங்களும் நாம் வேறு ஏதோ ஒரு உலகத்தில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது.
இப்படி நீங்கள் சுற்றிப் பார்க்கவும், சாகசம் நிறைந்த விளையாட்டுகளுக்கும் பல இடங்கள் காஷ்மீரில் உள்ளன.
என்ன! நீங்களும் காஷ்மீர் போக ரெடி ஆயிட்டீங்களா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“