நேரடியாக எலுமிச்சையை முகத்தில் போடாதீர்கள் – ராஜா ராணி 2 அர்ச்சனா சரும பராமரிப்பு டிப்ஸ்!

Raja Rani 2 Archana Skincare Tips Tamil News அந்த சிறப்பு மாவில், பயித்தம் மாவு, பூலாங்கிழங்கு, காயவைத்த ரோஜா இதழ்கள், சந்தனம், வேப்பிலை, ஆரஞ்சு தோல் ஆகியவை இருக்கும்.

Raja Rani 2 Archana Skincare Tips Tamil News
Raja Rani 2 Archana Skincare Tips Tamil News

Raja Rani 2 Archana Skincare Tips Tamil News : விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் மிரட்டும் வில்லியாக வரும் அர்ச்சனா, உண்மையில் அதற்கு அப்படியே எதிர்மறையானவர். எப்போதும் சிரித்துக்கொண்டு மற்றவர்களைக் கலாய்த்துக்கொண்டே இருக்கும் இவர், சமீபத்தில் தன்னுடைய ஸ்கின்கேர் சீக்ரெட்டுகளை பகிர்ந்துகொண்டார். சில உபயோக டிப்ஸ்களை கொடுத்து, கண்டிக்கவும் செய்தார்.

“முதலில் சோப், பிறகு வீட்டிலேயே தயாரிக்கும் சிறப்பு மாவு, இறுதியாக ஃபேஸ் வாஷ் ஆகிய இந்த மூன்று பொருள்களையும் சேர்த்து உபயோகித்தால் மட்டுமே எனக்கு நிம்மதியாக இருக்கும். எனக்கு முகம் கழுவிய உணர்வே இவற்றைப் பயன்படுத்தினால்தான் கிடைக்கும். அந்த சிறப்பு மாவில், பயித்தம் மாவு, பூலாங்கிழங்கு, காயவைத்த ரோஜா இதழ்கள், சந்தனம், வேப்பிலை, ஆரஞ்சு தோல் ஆகியவை இருக்கும்.

மேலும், வீட்டிலேயே முகத்தை பலப்பல என மாற்றவேண்டும் என்பதற்காக எலுமிச்சையை நேரடியாக முகத்தில் அப்ளை செய்வார்கள். அப்படியெல்லாம் நிச்சயம் செய்யவே கூடாது. அது சருமத்தை மேலும் டேமேஜ் செய்யும். அதற்கு பதிலாக, எப்போதும் சன்ஸ்க்ரீன் போடுங்கள். வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் சன்ஸ்க்ரீன் போட்டுக்கொள்ளுங்கள். சூரியனிலிருந்து வரும் ஊதா கதிர்வீச்சு இருக்கும் வீட்டிற்குள்ளேயும் படும். அதனால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதுதானே. குளித்து வந்ததும் முகத்தில் ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே பண்ணுவேன். இது நிச்சயம் உங்களை ஃப்ரெஷாக வைத்திருக்கும்.

டயட் பொறுத்தவரையில், அப்படி எல்லாம் எதையும் நான் பின்பற்ற மாட்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிப்பதெல்லாம் எதற்கு? வயிற்றை நிரப்பத்தானே. அதை முழுவதும் செய்துவிடுவேன். ஒரே வேளையில் நிறைய சாப்பிட மாட்டேன். வெரைட்டி வெரைட்டியாக அவ்வப்போது நிறைய சாப்பிடுவேன். சாப்பிடுவதற்கு ஏற்ற உடற்பயிற்சி அவசியம். காலையில் எழுந்ததும் குறைந்தபட்சம் அனைவரும் யோகா செய்யலாம்.”

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Raja rani 2 archana skincare tips tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com